Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஒரே" முடிவு.. 2,000 கோடி "சேஃப்".. ஐபிஎல் 2021 தொடரின் "கேம் சேஞ்சர்" பிசிசிஐ

மும்பை: ஐபிஎல் 2021 தொடர் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த சூழலில், அதனை மீண்டும் தொடங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த பிசிசிஐ மிக சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி இன்று சாதித்துவிட்டது.

ஏப்ரல் மாதம் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடருக்கு எமனாக வந்தது கொரோனா. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் வருண் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று முதலில் ஏற்பட்டு, பிறகு அடுத்தடுத்து பல வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என கொரோனா பரவ ஆடிப் போனது பிசிசிஐ.

இதனால், மறு தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் தொடரை ஒத்திவைத்தது. இந்த சூழலில், தான் செப்.19ம் தேதி மீண்டும் ஐபிஎல் தொடங்கும் என்று ஸ்போர்ட்ஸ் டுடே செய்தி வெளியிட்டது.

ஸ்ட்ராங் மனநிலை

ஸ்ட்ராங் மனநிலை

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்.19 அல்லது செப்டம்பர் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்றும், அக்டோபர் 10ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவித்த ஸ்போர்ட்ஸ் டுடே, ஐபிஎல் நடக்க வாய்ப்பு உறுதி என்ற மனநிலையை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.

21 நாளில் போட்டிகள்

21 நாளில் போட்டிகள்

குறிப்பாக, மீதமுள்ள 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படுமாம். அதேபோல் 7 single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜெய் ஷா அறிவிப்பு

ஜெய் ஷா அறிவிப்பு

இந்த நிலையில் தான் இன்று நடந்த பிசிசிஐ சிறப்பு கூட்டத்தில், செப்டம்பர் - அக்டோபரில் அமீரகத்தில் ஐபிஎல் நடைபெறும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இதன் மூலம், ஆயிரக்கணக்கான கோடி இழப்பில் இருந்து தப்பித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

2000 கோடி இழப்பு

2000 கோடி இழப்பு

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில், முழு ஐபிஎல் தொடரையும் நடத்தியதில் பிசிசிஐ பார்த்த வருமானம் ரூ.4,000 கோடி. அதவாது, ஒரு போட்டிக்கு சராசரியாக 67 கோடி. அதுவும், ஒரு போட்டியில் கூட பார்வையாளர்கள் இல்லாமல். இந்த ஆண்டும் அதே அளவுக்கான வருமானத்தை பிசிசிஐ எதிர்பார்த்தது. ஆனால், மொத்தமுள்ள 60 போட்டிகளில், 31 போட்டிகள் மீதமுள்ள நிலையில், அதனை நடத்தாமல் விட்டால் ரூ.2000 கோடி இழப்பு ஏற்படும் சூழல் உள்ளதாம்.

ரூ.40 கோடிக்கும் மேல்

ரூ.40 கோடிக்கும் மேல்

அதுமட்டுமின்றி, ஐபிஎல் அணிகளின் மற்றொரு கவலை, பல்வேறு நிறுவனங்களுடனான அவர்களின் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள். ஒவ்வொரு ஐபிஎல் அணியும், அதன் ஸ்டார் வேல்யூ மற்றும் பாப்புலாரிட்டி அடிப்படையில், தங்கள் அணி ஜெர்சிகளில் நிறுவனங்களின் பெயர்களைக் காண்பிக்க ஸ்பான்சர்களிடமிருந்து பல கோடி ரூபாய்களைப் பெறுகிறது. ஜெர்சி அல்லது வீரர்களின் ஹெல்மெட், பேட் போன்ற இதர பொருட்களில் ஸ்பான்சர் லோகோ எங்கு வைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அணிகள் ரூ .40 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவதாக கூறப்படுகிறது.

800 கோடி

800 கோடி

எட்டு உரிமையாளர்களும் இந்த ஸ்பான்சர்ஷிப்களிலிருந்து ஆண்டுக்கு ரூ .500 கோடி வரை சம்பாதிக்கிறார்கள், இது டிஜிட்டல் உரிமைகள் விற்பனையை மேம்படுத்துவதால், இந்த ஆண்டு சுமார் 600 கோடி ரூபாய் வருமானம் இதன்மூலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்பான்சர்ஷிப்களால் பி.சி.சி.ஐ ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800 கோடி ரூபாய் சம்பாதிக்கிறது. இப்போது 31 போட்டிகளும் நடத்தப்படவில்லை எனில், இந்த வருமானத்தில் பாதி குறையலாம். இந்த சூழலில் தான், ஐபிஎல் அமீரகத்தில் நடைபெறும் என்று ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Story first published: Saturday, May 29, 2021, 16:09 [IST]
Other articles published on May 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+