அடிபொலி.. ராஜஸ்தான் கேப்டன் பதவியை அலங்கரிக்கும் சஞ்சு சாம்சன்.. புதிய இயக்குனர் யாருன்னு பாருங்க!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மொத்தமாக அந்த அணியில் இருந்து விடுவிடுக்கப்பட உள்ளார். அந்த அணியின் பயிற்சியாளர் ஆலோசகர் உட்பட நிர்வாக குழுவும் மாற்றப்பட்டு உள்ளது.
2021 ஐபிஎல் தொடர் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் 11ம் தேதி ஐபிஎல் ஏலம் நடக்க உள்ள நிலையில் தற்போது வீரர்களின் ரிட்டென்சன் பட்டியல் வெளியாகி வருகிறது.

ராஜஸ்தான்
ராஜஸ்தான் அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். முதல் தர போட்டிகளில் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி வருகிறார். சையது முஸ்தாக் கோப்பை போட்டியில் கேரளாவை இவர் கேப்டனாக சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.

கேரளா
கேரளாவில் இவரின் கேப்டன்சியை பார்த்து ராஜஸ்தான் அணி ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது ஐபிஎல் அணிக்கும் கேப்டன் ஆகியுள்ளார். டெல்லி அணிக்கு கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் உள்ள நிலையில் தற்போது ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக இளம் வீரர் சஞ்சு பொறுப்பேற்றுள்ளார்.

இயக்குனர்
இது போக ராஜஸ்தான் அணியின் இயக்குனராக தற்போது குமார் சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை அணியின் பயிற்சியாளராக ஜெயவர்த்தனே இருக்கிறார். இந்த நிலையில் சங்கக்காரா ராஜஸ்தான் அணியை நிர்வகிக்க உள்ளார்.

வார்னே
இதனால் ராஜஸ்தான் அணியில் ஷேன் வார்னேவின் ஆதிக்கம் மொத்தமாக குறையும். ராஜஸ்தான் அணி உருவாக்கப்பட்டதில் இருந்து அதில் வார்னே முக்கிய பங்கு வகித்தார். இப்போது ஸ்மித் நீக்கப்பட்டுள்ள நிலையில் வார்னேவின் ஆதிக்கமும் குறையும் எனபது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications