Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அச்சோ அவசரப்பட்டு முடிவெடுத்துட்டோம்.. இப்படி ஆகிடுச்சே.. தலையில் கை வைத்த ஐபிஎல் அணி.. டிவிஸ்ட்!

சென்னை: ஐபிஎல் 2021 தொடரில் ராஜஸ்தான் கேப்டன்சியை மாற்றிவிட்டு தற்போது புலம்ப தொடங்கி உள்ளது.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கான மினி ஏலம் வரும் 18ம் தேதி நடக்க உள்ளது.

இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் இந்த ஐபிஎல் தொடருக்கு ஏற்றபடி திட்டங்களை வகுத்து வருகிறது. ராஜஸ்தான் அணியில் நிறைய அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

நீக்கம்

நீக்கம்

ராஜஸ்தான் அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். முதல் தர போட்டிகளில் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி வருகிறார். சையது முஸ்தாக் கோப்பை போட்டியில் கேரளாவை இவர் கேப்டனாக சிறப்பாக வழி நடத்தினார்.

கேரளா

கேரளா

இந்த நிலையில் தற்போது ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று அந்த அணி திட்டமிட்டு வருகிறது. அதேபோல் இது போக ராஜஸ்தான் அணியின் இயக்குனராக தற்போது குமார் சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகம்

சந்தேகம்

இந்த நிலையில் ஐபிஎல் 2021 தொடரில் ராஜஸ்தான் கேப்டன்சியை மாற்றிவிட்டு தற்போது புலம்ப தொடங்கி உள்ளது. ஏனென்றால் சஞ்சு சாம்சன் இப்போது பார்மில் இருந்தாலும் அவரின் கேப்டன்சி அவ்வளவு சிறப்பாக இல்லை. இவர் சையது முஷ்டாக் கோப்பையில் கேரளா தோல்வி அடைய காரணமாக இருந்தார்.

 கேரளா அணி

கேரளா அணி

கேரளா அணியே அந்த தொடருக்கு பின் இவரின் கேப்டன்சியை நீக்கிவிட்டது. விஜய் ஹசாரே கோப்பை தொடரில் கேரளா அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் இல்லை. கேரளா அணிய இவரை நம்பவில்லை.

மோசம்

மோசம்

அதேபோல் இவர் நேற்று நடந்த பிட்னஸ் டெஸ்டிலும் சஞ்சு சாம்சன் தோல்வி அடைந்தார். இதனால் அவசரப்பட்டு சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமித்துவிட்டோமோ என்று ராஜஸ்தான் அணி புலம்ப தொடங்கி உள்ளது. ஐபிஎல் தொடர் தொடங்கிய பின்பே இவரின் கேப்டன்சி எப்படி இருக்கிறது என்று தெரிய வரும்.

Story first published: Saturday, February 13, 2021, 12:24 [IST]
Other articles published on Feb 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+