Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவருக்கு 10 கோடியா? உங்க மண்டைல கல்லு தான் இருக்கு.. சரமாரியாக விளாசிய ஸ்காட் ஸ்டைரிஸ்!

மும்பை : ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் கடந்த ஐபிஎல் தொடரில் மோசமான பார்மில் இருந்தார்.

அவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விடுவித்துள்ளது. அவர் மீண்டும் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்.

இந்த முறை அவரை ஏலத்தில் எந்த அணியாவது 10 கோடி கொடுத்து வாங்கினால் அவர்கள் தலையில் கல் தான் இருக்கிறது என ஸ்காட் ஸ்டைரிஸ் கூறி இருக்கிறார்.

கிளென் மேக்ஸ்வெல்

கிளென் மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் கடந்த 2020 ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 10.75 கோடிக்கு வாங்கப்பட்டார். ஆனால், போட்டிகளில் மோசமாக செயல்பட்டார். ஒரு போட்டியில் கூட பெரிய இன்னிங்க்ஸ் ஆடாத அவர், ஒரு சிக்ஸ் கூட அடிக்கவில்லை.

கடுப்பான பஞ்சாப்

கடுப்பான பஞ்சாப்

ஆனால், ஆஸ்திரேலிய அணிக்காக ஒருநாள் தொடரில் ஆடும் போது அதிரடி ஆட்டத்தில் தெறிக்கவிட்டார். அதைக் கண்ட பஞ்சாப் அணி நிர்வாகம் குமுறியது. இந்த நிலையில், அவர் 2021 இப்ல் தொடரில் தக்க வைக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

நீக்கம்

நீக்கம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிரடியாக கிளென் மேக்ஸ்வெல்-ஐ நீக்கியது. அதற்கு முக்கிய காரணம் கடந்த ஐபிஎல் தொடர்களில் அவரது மோசமான ஆட்டமும், அவரது அதிகப்படியான சம்பளத் தொகையும் தான். இதை அடுத்து அவர் 2021 ஏலத்தில் பங்கேற்க இருக்கிறார்.

ஸ்டைரிஸ் அதிரடி

ஸ்டைரிஸ் அதிரடி

முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் இது பற்றி கூறுகையில், கிளென் மேக்ஸ்வெல்-ஐ 10 கோடி கொடுத்து வாங்கினால் அவர்கள் தலையில் கல் தான் இருக்கிறது. அவர் நல்ல வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அவரிடம் திறமை உள்ளது. ஆனால், உண்மையான செயல்பாடு குறைவாக உள்ளது என்றார்.

அடிப்படை விலை

அடிப்படை விலை

அவரை நிச்சயம் ஏலத்தில் சில அணிகள் வாங்க முயற்சி செய்யும். ஆனால், அவரை அடிப்படை விலைக்கு வாங்கவே நினைப்பார்கள். கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக அவர் மோசமாக ஆடி வரும் நிலையில், அவரை வாங்கும் அணிகளுக்கு அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும் என்றார்.

Story first published: Wednesday, January 27, 2021, 13:25 [IST]
Other articles published on Jan 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+