For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னும் இரண்டே நாளில்.. பிசிசிஐ "அவசர" மீட்டிங் - "குளுகுளு" அறிவிப்பு ரெடி!

மும்பை: ஐபிஎல் 2021 தொடர் மீண்டும் தொடங்கப்படுவது குறித்த இறுதி முடிவு அவசரமாக கூட்டப்பட்டுள்ள SGM மீட்டிங்கில் எடுக்கப்பட உள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் உள்ளது. நாடு முழுவதும் தினம் ஆயிரக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட, பலரும் உயிரிழந்தும் வருகின்றனர்.

இதற்கிடையில் நடைபெற்ற ஐபிஎல் 2021 தொடரில், கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டது.

பிறகு அடுத்தடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகள், இதர கொல்கத்தா வீரர்கள் என்று அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட, மறு தேதி குறிப்பிடாமல் தொடரை ஒத்திவைத்தது பிசிசிஐ.

செப்.19 அல்லது செப். 20

செப்.19 அல்லது செப். 20

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்.19 அல்லது செப்டம்பர் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்றும், அக்டோபர் 10ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் ஸ்போர்ட்ஸ் டுடே நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டது. இந்த 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படும் என்றும், 7 போட்டிகள் single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

யூடியூப் நிகழ்ச்சியில்

யூடியூப் நிகழ்ச்சியில்

இத்தகவலை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளதாகவும், பிசிசிஐ அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்ததாகவும் விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜூம்தார் ஸ்போர்ட்ஸ் டுடே யூடியூப் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. காய்ந்து கிடந்த ரசிகர்களுக்கு ஐந்து ரூபாய் குச்சி ஐஸாய் குளுகுளுக்க வைத்தது.

SGM மீட்டிங்

SGM மீட்டிங்

இந்த நிலையில், ஏபிபி நேற்று வெளியிட்ட செய்தியில், "மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள், இங்கிலாந்து - இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவில், செப்டம்பர் 18 அல்லது 19 முதல் ஷார்ஜா, அபுதாபி மற்றும் துபாயில் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் சனிக்கிழமை அன்று பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் SGM மீட்டிங் முடிவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் ரீ ஸ்டார்ட்

ஐபிஎல் ரீ ஸ்டார்ட்

உலகக் கோப்பை முடிவு செய்ய, வரும் ஜூன் 1ம் தேதி ஐசிசி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த நிலையில், அதற்கு முன்பாகவே.. அதாவது மே 29ம் தேதி, SGM எனப்படும் 'சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை' பிசிசிஐ கூட்டியுள்ளது. இதில், உலகக் கோப்பையை நடத்துவது குறித்தும், ஐபிஎல் தேதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இறுதியில், ஐபிஎல் ரீ ஸ்டார்ட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிட உள்ளதாகவும் ஏபிபி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் ஜூன் 1 அன்று நடக்கும் ஐசிசி மீட்டிங்கின் போது, பிசிசிஐ அதிகாரிகள் தெரிவிக்க உள்ளனர்.

Story first published: Thursday, May 27, 2021, 16:59 [IST]
Other articles published on May 27, 2021
English summary
IPL 2021 UAE Official Announcement SGM Meeting - ஐபிஎல் 2021
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+