என்ன மனுஷன்யா.. படுத்த படுக்கையாக இருக்கும் போதும்.. டெல்லிக்கு மெசேஜ் அனுப்பிய ஸ்ரேயாஸ்.. உருக்கம்
மும்பை: இன்று டெல்லி கேப்பிடல்ஸ் முதல் போட்டியில் ஆடவுள்ள நிலையில் மருத்துவமனையில் இருக்கும் போதும் உருக்கமான வார்த்தைகளால் அணிக்கு ஊக்கம் கொடுத்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.
ஐபிஎல் தொடரின் 2வது போட்டி இன்று மும்பையில் தொடங்குகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளதால் டெல்லி அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ரிஷப் பண்ட் இன்று செயல்படவுள்ளார்.

காயம்
ஐபிஎல் தொடரில் கடந்த 2 வருடங்களாக ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் டெல்லி அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்ரேயாஸ் வீடியோ
இந்நிலையில் இன்றைய போட்டிக்காக டெல்லி அணிக்கு உருக்கமான வீடியோவை ஸ்ரேயாஸ் பதிவிட்டுள்ளார். அதில் அன்பான டெல்லி அணி, நான் ஒரு ரசிகனாக வாழ்த்து கூறுகிறேன். நாம் எப்போதும் போன்று இன்று சண்டை செய்ய வேண்டும். கோப்பையை வெல்ல என்ன தேவையோ அது நம்மிடம் உள்ளது.

உருக்கம்
இது கொஞ்சம் கடினம் தான். ஆனால் நாம் முன்பு எப்போதும் இல்லாதவாறு கடினமாக உழைத்துள்ளோம். முக்கியமாக ஒரு அணி வீரர்கள் என்பதை தாண்டி ஒன்றாக இணைந்து செயல்பட்டுள்ளோம். ஒரு தவறும் செய்யாதீர்கள் ஒவ்வொரு ஆட்டத்திலும், பந்திலும், நான் உங்களுடன் இருப்பேன். உங்களை உற்சாகப்படுத்திக்கொண்டே, வாருங்கள் மச்சா எனத்தெரிவித்துள்ளார்.
சிகிச்சை முடிந்தது
இதனிடையே தோள்பட்டை காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஸ்ரேயாஸ் அய்யர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று அவருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஸ்ரேயாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications