Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏமாற்றிய "கோட்".. நீங்க எங்களுக்கு வேண்டாம்.. நீக்கப்படுகிறார் ஸ்மித்.. ஐபிஎல்லில் செம டிவிஸ்ட்!

சிட்னி: இந்திய வீரர்களை ஏமாற்றும் வகையில் நேற்று ஸ்மித் ஆடிய நிலையில் ஐபிஎல் தொடரில் இவரின் கேப்டன்சி பறிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய மூத்த வீரர் ஸ்மித் நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்திய வீரர் பண்ட் போட்டு வைத்து இருந்த கார்டை ஸ்மித் மைதானத்தில் அழித்தார்.

யாருக்கும் தெரியாமல் பண்ட் வரைந்து வைத்து இருந்த கோட்டை ஸ்மித் அழித்தார். ஸ்மித்தின் இந்த செயல் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல்

வைரல்

ஸ்மித் இப்படி நடந்து கொண்ட நிலையில் ஸ்மித் ஒரு ஏமாற்றுக்காரர். அவர் கொஞ்சம் கூட திருந்தவில்லை. உப்புத்தாள் சர்ச்சைக்கு பின் ஸ்மித் நல்லவராக வருவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் கொஞ்சம் கூட மாறவே இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

விமர்சனம்

விமர்சனம்

இந்திய வீரர்களை ஏமாற்றும் வகையில் நேற்று ஸ்மித் ஆடிய நிலையில் ஐபிஎல் தொடரில் இவரின் கேப்டன்சி பறிக்கப்படும் என்று கூறுகிறார்கள். அதன்படி வரும் ஐபிஎல் ஏலத்தில் ஸ்மித் ராஜஸ்தான் அணி மூலம் ரீட்டெயின் செய்யப்பட மாட்டார். இவரை ஏலத்தின் போது எடுக்க ராஜஸ்தான் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

முடிவு

முடிவு

இவருக்கு பதிலாக இந்தியர் ஒருவரை அணியின் கேப்டனாக நியமிக்க ராஜஸ்தான் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பெரும்பாலும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பார் என்கிறார்கள். ஸ்மித் கேப்டன்சியில் கடந்த ஐபிஎல்லில் ராஜஸ்தான் மோசமாக ஆடியது.

கெட்டபெயர்

கெட்டபெயர்

அதோடு இவரின் தனிப்பட்ட டி 20 பேட்டிங்கும் சரியில்லை. இந்திய ரசிகர்களிடமும் இவர் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டுள்ளார். இதனால் ஸ்மித் மீது ராஜஸ்தான் அணி நிர்வாகம் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறுகிறார்கள் .

Story first published: Tuesday, January 12, 2021, 10:35 [IST]
Other articles published on Jan 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+