Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வீரர்களை சீண்டிய ஸ்மித்.. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து நீக்கம்.. ஐபிஎல்லில் டிவிஸ்ட்!

சென்னை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மொத்தமாக அந்த அணியில் இருந்து விடுவிடுக்கப்பட உள்ளார். அந்த அணியின் பயிற்சியாளர் ஆலோசகர் உட்பட நிர்வாக குழுவும் மாற்றப்பட உள்ளது.

2021 ஐபிஎல் தொடர் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் 11ம் தேதி ஐபிஎல் ஏலம் நடக்க உள்ள நிலையில் தற்போது வீரர்களின் ரிட்டென்சன் பட்டியல் வெளியாகி வருகிறது.

ஏலத்திற்கு முன்பாக 8 ஐபிஎல் அணிகளும் வெளியேற்றும், தக்க வைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியாகி வருகிறது. முழு பட்டியல் இன்று இரவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மொத்தமாக அந்த அணியில் இருந்து விடுவிடுக்கப்பட உள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் இவர் சரியாக ஆடவில்லை. ராஜஸ்தான் அணியையும் இவர் சரியாக வழிநடத்தவில்லை. ராஜஸ்தானின் மோசமான தோல்விக்கு இவர் காரணமாக இருந்தார்.

வீரர்கள்

வீரர்கள்

அணியில் நல்ல வீரர்கள் இருந்தும் ஐபிஎல்லில் ஸ்மித் பெரிய ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் அணியில் இருந்து விடுவிடுக்கப்பட்டுள்ளார். இதனால் 2021 ஏலத்தில் எந்த அணி ஸ்மித்தை எடுக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

ஏலம் எடுக்க வேண்டும்

ஏலம் எடுக்க வேண்டும்

இவரை ஏலம் எடுக்க நிறைய அணிகள் முயற்சி செய்ய வாய்ப்பு உள்ளது. டெல்லி உள்ளிட்ட அணிகள் ஸ்மித்தை எடுக்க முயற்சி செய்யலாம். நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் ஸ்மித் இந்திய வீரர்களை ஸ்லெட்ஜ் செய்ததும், ரிஷாப் பண்டின் கார்டை அழித்ததும் பெரிய அளவில் சர்ச்சையானது.

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணி

இந்த நிலையில் ராஜஸ்தான் அணி மொத்தமாக ஸ்மித்தை நீக்கியுள்ளது. அதேபோல் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஆலோசகர் உட்பட நிர்வாக குழுவும் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வருகிறது. ராஜஸ்தான் ஆலோசகராக இருக்கும் வார்னே நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

Story first published: Wednesday, January 20, 2021, 17:29 [IST]
Other articles published on Jan 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+