Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை அணிக்கு இப்படி ஒரு ப்ளஸ் பாய்ண்ட்.. அவங்கள ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம்..கணக்குப் போட்ட கவாஸ்கர்

மும்பை: ஐபிஎல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஒரே ஒரு காரணத்தால் இந்த முறை யாராலும் அசைக்க முடியாத அணியாக விளங்கும் என முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

14வது ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்காக இரு அணிகளும் ஆயத்தமாகி வரும் நிலையில் மும்பை அணி இந்த சீசனில் பெரும் சக்திகளுடன் களமிறங்குவதால் அதனை எதிர்க்கொள்வது கடினம் என முன்னாள் வீரர் கவாஸ்கரே தெரிவித்துள்ளார்.

மும்பை அணி

மும்பை அணி

ஐபிஎல்-ல் 5 முறை கோப்பை வென்ற ஒரே அணி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி ஆகும். ரோகித் சர்மா தலைமையிலான இந்த அணி வழக்கமாக முதலில் சொதப்பிவிட்டு பின்னர் சிறப்பாக ஆடும் என்ற விமர்சனம் இருந்தது. ஆனால் கடந்த சீசனில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. அதே போல இந்தாண்டும் தொடக்கம் முதலே வெற்றி முகம்காண வீரர்கள் தயாராகி வருகின்றனர்.

சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

இதுகுறித்து பேசியுள்ள கவாஸ்கர், இந்த ஆண்டு ஐபிஎல்-ல் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடிப்பது மிக கடினம். அந்த அணியின் வீரர்கள் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் என்ன ஃபார்மில் இருக்கிறார்கள் என்பதை இங்கிலாந்து தொடரில் அரை சதம் அடித்து அசத்தியதிலேயே பார்த்தோம். அதே போல ஹர்த்திக் பாண்டியாவும் பழைய ஃபார்முக்கு திரும்பிவிட்டார். எனவே மும்பை அணி மிகவும் சக்திவாய்ந்த அணியாக விளையாடவுள்ளது.

பலம்

பலம்

இங்கிலாந்து தொடரில் பங்கேற்ற மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களான இஷான் கிஷான் 32 பந்துகளில் 56 ரன்கள் அடித்து அசத்தினார். அதே போல 4வது டி20 போட்டியில் முதல் முதலில் சர்வதேச போட்டியில் பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 57 ரன்கள் அடித்தார். அவர் விளையாடிய 3 போட்டிகளில் சூர்யகுமார் 89 ரன்களை சேர்த்தார்.

 பாண்டியா

பாண்டியா

இதே போல பாண்டியா பிரதர்ஸ், இங்கிலாந்து தொடரில் கெத்து காட்டினர். ஒருநாள் தொடரில் அறிமுகமான க்ருணால் தன் முதல் போட்டியிலேயே அரை சதம் அடித்தார். அதே போல ஹர்த்திக் பாண்டியா மீண்டும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட தொடங்கிவிட்டார். இதுகுறித்து பேசிய கவாஸ்கர், ஹர்த்திக் பந்துவீச தொடங்கியது மும்பை அணிக்கு மட்டுமல்ல இந்திய அணிக்கும் நல்ல விஷயம். வரவிருக்கும் உலககோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் அவர் ஆட தயார் என்பதை காட்டுகிறது என தெரிவித்தார்.

Story first published: Tuesday, March 30, 2021, 13:05 [IST]
Other articles published on Mar 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+