Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெய்னாவுக்கு இந்த நிலைமையா? சிஎஸ்கே மட்டுமில்லை.. மற்ற அணிகளும் ஏலம் கேட்க தயக்கம்.. பரபர தகவல்!

மும்பை : சுரேஷ் ரெய்னாவை 2021 ஐபிஎல் ஏலத்தில் யாரும் வாங்காமல் போகலாம் என கூறப்படுகிறது.

சிஎஸ்கே அணியும் அவரை தக்க வைக்காது என்பதால் அவர் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த ஐபிஎல் ஏலத்தில் அவரை யாரும் வாங்க முன்வராமல் போகலாம். அதற்கு காரணம், அவரது சமீபத்திய செயல்பாடு தான்.

சிஎஸ்கே பிரிவு

சிஎஸ்கே பிரிவு

சுரேஷ் ரெய்னா 2020 ஐபிஎல் தொடருக்கு முன் சிஎஸ்கே அணியை விட்டு விலகினார். அவர் அணி நிர்வாகத்துடன் மோதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வந்தன. அதன் பின் அவர் மீண்டும் சிஎஸ்கே அணியுடன் சேர விருப்பம் தெரிவித்தும், சிஎஸ்கே அணி எந்த முடிவையும் எடுக்கவில்லை.

ஆர்வம் காட்டவில்லை

ஆர்வம் காட்டவில்லை

சிஎஸ்கே அணி அவரை 2021 ஐபிஎல் தொடரில் தக்க வைக்க ஆர்வம் காட்டவில்லை என தகவல்கள் கூறுகின்றன. காரணம், அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு தான் என கூறப்படுகிறது. இந்த நிலையில், சுரேஷ் ரெய்னாவை மற்ற அணிகள் ஏலத்தில் எடுக்க போட்டி போடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

போட்டி போட மாட்டார்கள்

போட்டி போட மாட்டார்கள்

ஆனால், இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை வாங்க பெரிய அளவில் யாரும் போட்டி போட மாட்டார்கள் என கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம், அவர் உள்ளூர் டி20 தொடரான சையது முஷ்டாக் அலி தொடரில் சராசரியாக ஆடி வருவது தான்.

குறைந்த ரன்கள்

குறைந்த ரன்கள்

அவர் இந்த தொடரில் நான்கு போட்டிகளில் 98 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது அடிப்படை விலை அதிகமாக இருக்கும் என்பதால் ஏலத்தில் மற்ற ஐபிஎல் அணிகள் அவரை பெரிய விலை கொடுத்து வாங்க ஆர்வம் காட்டாமல் போகும் நிலை உருவாகலாம்.

Story first published: Monday, January 18, 2021, 16:41 [IST]
Other articles published on Jan 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+