இந்த அளவுக்கு வெறியா.. சுரேஷ் ரெய்னாவுக்காக ரசிகர் செய்த காரியம்.. நெகிழ்ந்த சென்னை ரசிகர்கள்!
மும்பை: சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னாவுக்காக ரசிகர் செய்துள்ள செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 2வது லீக் போட்டி நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சுரேஷ் ரெய்னாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஆட்டம்
நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 189 என்ற இலக்கை சுலபமாக எட்டி வெற்றி பெற்றது. சென்னை அணி தோல்வியை சந்தித்தாலும், ரசிகர்களுக்கு ஆறுதல் தந்த விஷயம் ரெய்னாவின் கம்பேக் தான். சென்னை அணியில் பேட்டிங்கின் போது தொடக்க வீரர்கள் 2 பேர் அடுத்தடுத்து சரிந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதனால முதல் 3 ஓவர்களுக்குள் சென்னை அணி தடுமாறியது.

முதல் நபர்
ஆனால் விக்கெட் விழுவதை கண்டுகொள்ளாமல் தனது வழக்கமான ஆட்டத்தை தொடர்ந்த ரெய்னா அணியை சரிவில் இருந்து மீட்டார். அதிரடியாக ஆடிய அவர் 36 பந்துகளில் 54 ரன்களை எடுத்தார். இதில் 3 பவுண்டரிகளும், 4 சதங்களும் அடங்கும். மேலும் இந்த சீசனின் ஒரு வீரர் அடிக்கும் முதல் அரை சதம் இதுவாகும்.

கம்பேக்
சர்வதேச தொடரில் இருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ரெய்னா சமீப காலமாக எந்த ஒரு தொடரிலும் பங்கேற்கவில்லை. இதனால் அவரின் ஃபார்ம் குறித்து பல கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் நேற்று அவர் கம்பேக் கொடுத்ததற்கு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அந்தவகையில் இன்பத்தின் உச்சத்திற்கு சென்ற ரசிகர் ஒருவர் சுரேஷ் ரெய்னாவுக்காக டிவியை பார்த்து ஆரத்தி எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்னும் பல இடங்களில் பட்டாசுக்கள் வெடித்தும் ரெய்னாவின் வருகையை கொண்டாடியதாக கூறப்படுகிறது.
ரசிகர்களுக்கு நம்பிக்கை
கடந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு ஐக்கிய அரபு அமீரகம் வரை சென்ற ரெய்னா, பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகினார். மற்றொரு புறம் அணி நிர்வாகத்துடன் மனகசப்பு இருந்தது என்றும் கூறப்பட்டது. இதனால் கடந்தாண்டு சிஎஸ்கே படுதோல்வியை சந்தித்ததற்கு ரெய்னா இல்லாதது பெரிய காரணமாக பார்க்கப்பட்டது. தற்போது அவரின் வருகை அனைவருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications