
ஓப்பனிங் சொதப்பல்
தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிதிஷ் ராணா - சுப்மன் கில் ஜோடி நிதானமான தொடக்கத்தை கொடுத்தனர். சிறப்பான பார்ட்னர்ஷிப் அமையும் என எதிர்பார்த்த நிலையில் சுப்மன் கில் 11 ரன்களுக்கு ரன் அவுட்டானார். அவர் அவுட்டான அடுத்த சில ஓவர்களில் நிதிஷ் ராணாவும், சேட்டன் சகாரியா பந்துவீச்சில் அவுட்டானார்.

திரிபாதி போராட்டம்
பின்னர் வந்த ராகுல் திரிபாதி - சுனில் நரேனுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்றார். ஆனால் உனத்கட் வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்ற சுனில் நரேன் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் 54 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறியது.

திடீர் குழப்பம்
அணியை மீட்க களமிறங்கிய கொல்கத்தா அணி கேப்டன் அனைவரையும் ஏமாற்றினார். இதனால் மறுபுறம் இருந்த திரிபாதி கடும் கோபத்திற்கு உள்ளானார். கிறிஸ் மோரிஸ் வீசிய 11வது ஓவரின் முதல் பந்தை ஸ்ட்ரைக்கில் இருந்த ராகுல் திரிபாதி ஸ்ட்ரெயிட் ஷாட் அடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த மோர்கனின் பேட்டில் பட்டு அருகிலேயே விழுந்தது.

மோர்கன் அவுட்
இதனையடுத்து உடனடியாக ராகுல் திரிபாதி சின்கிள் எடுக்க அழைத்தார். ஆனால் பந்து செல்லும் திசையை பார்த்துக்கொண்டிருந்த மோர்கன் மறு திசைக்கு செல்ல தயங்கி மீண்டும் வருவதற்குள் கிறிஸ் மோரிஸ் அந்த பந்தை எடுத்து மோர்கனை ரன் அவுட்டாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த ராகுல் திரிபாதி கையில் பேட்டுடன் ஆக்ரோஷமாக கத்தினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











