Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சி.எஸ்.கேவுக்கு இந்த 3 அணிதான் டஃப் கொடுக்குமாம்...அப்படி என்ன பலம் இருக்கு... முழு விவரம் இதோ

சென்னை: இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 3 அணிகளை எதிர்கொள்வது கடும் சவாலாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது, இதற்கான ஆயத்த பணிகளில் அனைத்து அணிகளும் இரங்கியுள்ளன.

இந்நிலையில் தோனியின் சி.எஸ்.கே அணிக்கு இந்த முறை சவாலாக இருக்கப்போகும் அணிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் சங்ககாரா சிறப்பு ஆலோசகராக உள்ளதால் ஏலத்தில் சிவம் தூபே, கிறிஸ் மோரிஸ், முஸ்டிவிஸுர் ரஹ்மான் ஆகியோர் எடுக்கப்பட்டுள்ளனர். அணியில் ஓப்பனிங்கில் பென் ஸ்டோக்ஸ், பட்லர் உள்ளனர். மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன், ரியன் பராக், சிவன் தூபே, ராகுல் தேவட்டியா உள்ளதால் 9 வது வீரர் வரை பேட்டிங் பலம் உள்ளது. அதே போல் பவுலிங்கிலும் அனுபவ வீரர்கள் உள்ளதால் அணி வலுவாக களமிறங்குகிறது.

டெல்லி கேப்பிடல்ஸ்

டெல்லி கேப்பிடல்ஸ்

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி கடந்த 2 ஆண்டுகளாக சிறந்த முறையில் ஆடி வருகிறது. பேட்டிங்கில் ரஹானே, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ப்ரித்தீவ் ஷா, ரிஷப் பண்ட், ஸ்டீவ் ஸ்மித், ஹெட்மெயர், சாம் பில்லிங்ஸ் உள்ளனர். அதே போல் பவுலிங்கில் ரபாடா, அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் பலம் வாய்ந்த வீரர்களாக உள்ளனர். இதனால் கண்டிப்பாக இது சென்னை அணிக்கு சவாலாக இருக்கும்.

மும்பை அணி

மும்பை அணி

5 முறை கோப்பை வென்றுள்ள மும்பை அணியில் ஓப்பனிங்கில் டிகாக், ரோகித் ஜோடி சிறப்பாக உள்ளது. அவர்களுக்கு அடுத்து கிறிஸ் லின், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், பொல்லார்ட், உள்ளனர். மிடில் ஆர்டரில் ஆல்ரவுண்டர்கள் ஹர்த்திக், க்ருணால் பெரிய பலம். கடந்த முறை அதிக ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் மும்பை அணி வீரர்கள் 3 பேர் இருந்தனர். அதே போல பவுலிங்கில் பும்ரா, போல்ட், கோல்டர் நைல், ஆடம் மைல்ன், ராகுல் சஹார் உள்ளதால் அந்த அணி பெரும் சவாலாக விளங்கும்.

சி.எஸ்.கே

சி.எஸ்.கே

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி முதல் தொடங்குகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி பல்வேறு போட்டிகளில் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக கேப்டன் தோனி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்க இந்த முறை முதல் அணியாக பயிற்சிகளை தொடங்கியுள்ளது. இதில் கேப்டன் தோனி, அம்பத்தி ராயுடு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அனுபவ வீரர்கள் அதிகம் உள்ளதால் சி.எஸ்.கே மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Friday, March 12, 2021, 22:21 [IST]
Other articles published on Mar 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+