Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொரோனா பீதி... புது முடிவு எடுத்துருக்கற பிசிசிஐ... பர்மிஷனுக்காக மட்டும்தான் வெயிட்டிங்காம்!

டெல்லி : ஐபிஎல் 2021 தொடர் 29 போட்டிகளை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது அணிகளுக்குள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

அடுத்தடுத்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு.. IPL 2021 மொத்தமாக நிறுத்தம்

இதையடுத்து நேற்றைய போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாளைய போட்டியும் தள்ளி வைக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தொடர்ந்து போட்டிகளை சிறப்பாக நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகளை பிசிசிஐ தற்போது மேற்கொண்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

ஐபிஎல் 2021 தொடரின் 29 போட்டிகளை வெற்றிகரமாக பிசிசிஐ நடத்தி முடித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படும் நிலையில், அணிகளுக்குள் சிறப்பான பயோ பபுளை மேற்கொண்டு கொரோனா பாதிக்காத வண்ணம் பிசிசிஐ முறையாக திட்டமிட்டு செயல்பட்டு வந்தது.

கேகேஆர் வீரர்களுக்கு கொரோனா

கேகேஆர் வீரர்களுக்கு கொரோனா

இந்நிலையில் நேற்றைய தினம் கேகேஆர் அணியின் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கடுமையான பயோ பபுளில் கொரோனா நுழைந்தது எப்படி என்று பிசிசிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தள்ளிவைக்கப்படும் போட்டிகள்

தள்ளிவைக்கப்படும் போட்டிகள்

கொரோனா பாதிப்பை அடுத்து நேற்றைய ஆர்சிபி மற்றும் கேகேஆர் இடையிலான போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கேவிலும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் நாளைய சிஎஸ்கே -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியும் தள்ளி வைக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ திட்டம்

இந்நிலையில் கொரோனா பாதிப்பு இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்தி முடிக்க அடுத்த கட்ட போட்டிகளை மும்பையில் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பயணங்களை தவிர்க்க முடியும். இதற்கென மகாராஷ்டிர அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மும்பையில் குறைந்தது

மும்பையில் குறைந்தது

அடுத்த கட்ட போட்டிகள் பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த சூழலில் அங்கு கொரோனா அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு மும்பையில் ஒரே கட்டமாக போட்டிகளை நடத்தி முடிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ஐபிஎல் போட்டிகளின் துவக்கத்தில் மும்பையில் அதிகமான கொரோனா கேஸ்கள் இருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, May 4, 2021, 11:05 [IST]
Other articles published on May 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+