Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பையில் அச்சுறுத்தும் கொரோனா கட்டுப்பாடோட ஐபிஎல் போட்டிகள் நடக்கும்.. அமைச்சர் அறிவிச்சுருக்காரு!

ஐபிஎல் 2021 தொடருக்கான போட்டிகள் வரும் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதிவரையில் நடைபெறவுள்ளது.

மும்பையில் தொடரின் 10 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் அங்கு கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பையில் கட்டுப்பாடுகளுடன் ஐபிஎல் 2021 நடைபெறும் என்று மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் அறிவித்துள்ளார்.

5 நாட்களில் துவக்கம்

5 நாட்களில் துவக்கம்

ஐபிஎல் 2021 தொடர் இன்னும் 5 நாட்களில் துவங்கவுள்ளது. முதல் போட்டி சென்னையிலும் இரண்டாவது போட்டி மும்பையிலும் நடைபெறவுள்ளது. சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையில் இந்த போட்டி நடைபெறவுள்ள நிலையில் மும்பையில் மட்டும் 10 ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன.

மகாராஷ்டிராவில் லாக்டவுன்

மகாராஷ்டிராவில் லாக்டவுன்

இந்நிலையில் மகாராஷ்டிராவில் பரவிவரும் கொரோனா காரணமாக அங்கு லாக் டவுன்அறிவிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரையிலும் வார இறுதி நாட்களில் வெள்ளி இரவு 8 மணிமுதல் திங்கட்கிழமை காலை 7 மணிவரையிலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடைகள் உள்ளிட்டவை மூடப்படவுள்ளன.

நவாப் மாலிக் அறிவிப்பு

நவாப் மாலிக் அறிவிப்பு

இந்த லாக்டவுன் இன்று இரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் அறிவித்துள்ளார். இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஐபிஎல் போட்டிகள் கட்டுப்பாடுகளுடன் நடைபெறவுள்ளதாக மாலிக் அறிவித்துள்ளார்.

அதிகமான கொரோனா பாதிப்பு

அதிகமான கொரோனா பாதிப்பு

ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டிகளின் வளாகத்திலேயே வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. நேற்றைய தினம் மட்டும் 57,074 புதிய கொரோனா பாதிப்பாளர்கள் மற்றும் 222 கொரோனா உயிரிழப்புகள் நடந்துள்ளன.

Story first published: Monday, April 5, 2021, 20:32 [IST]
Other articles published on Apr 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+