Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எந்த குழப்பமும் வேணாம்... ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடிதான் நடக்கும்... கங்குலி சொல்லியிருக்காரு!

டெல்லி : அதிகமான கொரோனா பரவலையடுத்து மகாராஷ்டிராவில் வார இறுதிக்கான லாக்-டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

4 தினங்களில் துவக்கம்

4 தினங்களில் துவக்கம்

ஐபிஎல் போட்டிகளுக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றன. ஐபிஎல்லின் முதல் போட்டி சென்னையிலும் இரண்டாவது போட்டி மும்பையில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சிஎஸ்கே இடையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.

லாக்டவுன் அறிவிப்பு

லாக்டவுன் அறிவிப்பு

ஏப்ரல் 10 முதல் 25ம் தேதி வரையில் மும்பையில் 10 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில் வான்கடே மைதானத்தின் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பிசிசிஐக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் பரவிவரும் கொரோனா வைரஸ் பரவலையடுத்து அங்கு வார இறுதியில் லாக்டவுனை அறிவித்துள்ளது மகாராஷ்டிரா அரசு.

திட்டமிட்டபடி நடத்தப்படும்

திட்டமிட்டபடி நடத்தப்படும்

வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணிவரை இந்த லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் மும்பையில் நடத்தப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

9ம் தேதி துவக்கம்

9ம் தேதி துவக்கம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஐபிஎல் யூஏஇயில் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் 6 இடங்களில் நடத்தப்படும் என்று பிசிசிஐ அறிவித்து வரும் 9ம் தேதி முதல் போட்டிகள் துவங்கவுள்ளன. இந்நிலையில் ஒரு சில வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 5, 2021, 14:49 [IST]
Other articles published on Apr 5, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+