Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோட்டலா எல்லாத்தையும் மாத்துங்க.. ஐபிஎல் ஒரு மாதம் நடக்கணும்.. "தாதா" வைத்த செக்

மும்பை: ஒருவழியாக ஐபிஎல் மீண்டும் தொடங்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. ஆனால், தேதிகளை இறுதி செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. ஆளாளுக்கு ஒரு தேதியை சொல்ல, இப்போது முடிவு கங்குலி கைகளில்.

Recommended Video

IPLஐ Miss செய்ய போகும் Foreign Players! என்ன காரணங்கள் ? |

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்.19 அல்லது செப்டம்பர் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்றும், அக்டோபர் 10ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் ஸ்போர்ட்ஸ் டுடே கடந்த மே.25 செய்தி வெளியிட்டது.

இத்தகவலை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளதாகவும், பிசிசிஐ அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்ததாகவும் விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜூம்தார் ஸ்போர்ட்ஸ் டுடே யூடியூப் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

 செப்.19 அல்லது செப்.20

செப்.19 அல்லது செப்.20

எனினும், ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதிகளில் தொடர்ந்து குளறுபடி நீடிக்கிறது. ஏபிபி-யின் டெலிகிராஃப் தளம் வெளியிட்ட செய்தியில், "ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 18 அல்லாதது 19ன் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டது. ஸ்போர்ட்ஸ் டுடே செப்.19 அல்லது செப்.20 தொடங்கும் என்று கூறியிருந்த நிலையில், டெலிகிராஃப் செப்.18 அல்லது 19ம் தேதி தொடங்கும் என்று கூறியது.

 சரியான முடிவா?

சரியான முடிவா?

இதில், டெலிகிராஃப் ரிப்போர்ட் படி போட்டிகள் தொடங்கவே அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. ஏனெனில், செப்.18 சனிக்கிழமை. ஒருவேளை அன்றைய தினம் தொடங்கப்படலாம். அல்லது மறுநாளான செப்.20 ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்படலாம். நிறுத்தப்பட்ட தொடர், மீண்டும் தொடங்கும் போது, ரசிகர்களின் எதிர்பார்ப்பு பழையபடியே இருக்க வேண்டுமெனில், வார இறுதியில் தொடரை தொடங்குவது தான் சரியான முடிவாக இருக்கும் என்று பிசிசிஐ கருதுவதே அதன் காரணம் என்று கூறப்பட்டது.

 புதிய தேதிகள்

புதிய தேதிகள்

இப்போது புது சிக்கலாக மீண்டும் புதிய தேதிகள் வெளியாகியுள்ளன. அதாவது, செப்டம்பர் 15 முதல் அக்டாபர் 15 வரை முழுமையாக போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ நாளை ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை, பிசிசிஐ சார்பில் "SGM" மீட்டிங் நடைபெற உள்ளது. அதில் இதுகுறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கங்குலி கருதுவது பாதுகாப்பு தானாம்.

 மக்கள் மனநிலை தெரியாது

மக்கள் மனநிலை தெரியாது

சில அதிகாரிகள் கூறுவது போல், 21 நாட்களில் போட்டிகளை நடத்தும்பட்சத்தில், 5 நாட்களுக்கு இரண்டு மேட்ச் நடத்தப்பட வேண்டும். இந்த இக்கட்டான கொரோனா நேரத்தில், இது பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது கங்குலியின் கருத்தாக உள்ளதாம். அதுமட்டுமின்றி, இந்தியாவில் கொரோனா வைரஸ் நிலைமை செப்டம்பரில் எப்படி இருக்கும் என்று இப்போதே கூறமுடியாது. ஒருவேளை, நிலைமை சற்று மோசமாக இருந்தால், மதியம் 3.30 மணி முதல் இரவு 11:30 மணி வரை டிவி முன்பு உட்கார்ந்து இரண்டு மேட்சுகள் பார்க்கும் மனநிலையில் மக்கள் இருக்க மாட்டார்கள்.

 முக்கிய ஆலோசனை

முக்கிய ஆலோசனை

எனவே, ஒரு நாளைக்கு ஒரு போட்டி என்றால், அது அனைவருக்கும் அனைத்து வகையில் உகந்ததாக இருக்கும் என்பதால், செப்டம்பர் 15 முதல் அக்டாபர் 15 வரை முழுமையாக போட்டிகளை நடத்தலாம் என்று கங்குலி இதர முக்கிய நிர்வாகிகளிடம் நாளைய எஸ்ஜிஎம் மீட்டிங்கில் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

Story first published: Friday, May 28, 2021, 21:29 [IST]
Other articles published on May 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+