Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெள்ளிக்கிழமை.. மங்களகரமாக தொடங்கும் ஐபிஎல்? - பரிதாப நிலையில் "கரீபியன்" லீக்

மும்பை: ஐபிஎல் தொடர் தொடங்கப்படும் தேதி ஏறக்குறைய முடிவாகிவிட்டது எனலாம். அமீரகம் வந்திறங்கிய பிசிசிஐ குழு, தேதிகளை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது.

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர், செப்டம்பர் மாதம் தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

மே.29 அன்று பிசிசிஐ சார்பில் நடந்த "SGM" மீட்டிங்கில் ஐபிஎல் தொடரை அமீரகத்தில் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் - அக்டோபர் வரை மீதமுள்ள 31 போட்டிகளும் நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார்.

கூடுதல் அவகாசம்

கூடுதல் அவகாசம்

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "இந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 சீசனின் மீதமுள்ள போட்டிகளை பிசிசிஐ நடத்தி முடிக்க உள்ளது. பிசிசிஐ சிறப்பு பொதுக் கூட்டத்தில் (எஸ்ஜிஎம்) இந்த முடிவு எடுக்கப்பட்டது. உறுப்பினர்கள் ஐபிஎல் மீண்டும் தொடங்க ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். மேலும், டி20 உலகக் கோப்பை 2021 நடத்துவதற்கு ஏதுவான நேரம் குறித்து முடிவெடுக்க கூடுதல் கால அவகாசம் ஐசிசியிடம் கேட்கப்பட உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் ஹேப்பி

ரசிகர்கள் ஹேப்பி

இந்த 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படும் என்றும், 7 போட்டிகள் single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று ஸ்போர்ட்ஸ் டுடே சமீபத்தில் செய்தி வெளியிட்டது. ஆனால், பிசிசிஐ அதுகுறித்த தகவலை உறுதி செய்யவில்லை.

நோ பிராப்ளம்

நோ பிராப்ளம்

இந்நிலையில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அமீரகம் சென்றிருக்கிறார். மீதமுள்ள போட்டிகளை எந்தவித சிக்கலுமின்றி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யும் விதமாக அவர் அமீரகம் சென்றுள்ளார். இதுகுறித்து அவர் கலீஜ் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், "இங்குள்ள கிரிக்கெட் வாரியம் மற்றும் பிற அதிகாரிகளுடன் ஐபிஎல் குறித்து கலந்துரையாடுவோம். அதன்படி அட்டவணை உருவாக்கப்படும். குறிப்பாக, கடந்த ஆண்டு இங்கு ஐபிஎல் நடந்ததைப் போல இம்முறையும் எந்த பிரச்சனையும் இன்று நடத்த வழிவகை செய்யப்படும்" என்றார்.

பிசிசிஐ முடிவு

பிசிசிஐ முடிவு

இந்த சூழலில், InsideSport தளம் வெளியிட்டுள்ள செய்தியில், ஐபிஎல் 2021 தொடரை செப்.17ம் தேதி தொடங்க பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே செப்.18 அல்லது செப்.19ம் தேதி தொடங்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், செப்.17.. அதாவது வெள்ளிக்கிழமை தொடரை தொடங்குவது என்று பிசிசி முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 10ம் தேதி பைனல் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

கோரிக்கை வைத்த பிசிசிஐ

கோரிக்கை வைத்த பிசிசிஐ

எனினும், தேதிகளை பிசிசிஐ இன்னும் வெளிப்படையாக அறிவிக்காததற்கு முக்கிய காரணம், கரீபியன் பிரீமியர் லீக். இத்தொடர், அமீரகத்தில் ஆகஸ்ட் 28 தொடங்கி, செப்டம்பர் 19 வரை நடைபெறுவதாய் அட்டவணை முடிவு செய்யப்பட்டது. இப்போது, பிசிசிஐ செப்.17ம் தேதியே தொடங்க வேண்டும் என்று முடிவு செய்திருப்பதால், கரீபியன் தொடரை 7 - 10 நாட்கள் முன்னதாகவே முடிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகத்திடம் இதுகுறித்து பிசிசிஐ ஏற்கனவே கோரிக்கை வைத்துவிட்டதாம்.

Story first published: Monday, May 31, 2021, 14:30 [IST]
Other articles published on May 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+