Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி அணியின் பலம், பலவீனம், பெஸ்ட் ப்ளேயிங் 11 என்ன? இந்த முறை கோப்பை வெல்லுமா? முழு கணிப்பு இதோ!

சென்னை: ஐபிஎல் தொடரில் பென்களூரு அணியின் பலம் மற்றும் பலவீனம், ப்ளேயிங் 11 கணிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத ஆர்.சி.பி அணி கடந்த ஆண்டு கடும் போராட்டத்திற்கு இடையே ப்ளே ஆஃப்-குள் சென்றது. எனினும் அந்த அணியால் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியவில்லை.

இந்நிலையில் இந்தாண்டு விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எப்படி செயல்படும் என மைக்கேல் குழுவால் கணிக்கப்பட்டுள்ளது.

ஆர்.சி.பி பலம்

ஆர்.சி.பி பலம்

விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் பெங்களூரு அணியின் தூண்களாக பார்க்கப்படுகிறது. இந்தாண்டு சிறப்பம்சமாக விராட் கோலி, தேவ்தத் பட்டிகலுடன் ஓப்பனிங் களமிறங்கவுள்ளார். பட்டிக்கல் கடந்தாண்டு சிறப்பாக செயல்பட்டார். அதே போல விராட் கோலி இங்கிலாந்து தொடரில் ஃபுல் ஃபார்மில் இருந்தார். அதே போல மிடிலில் டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோரை வைத்துள்ளதால் பேட்டிங் மிக பலமாக உள்ளது.

பந்துவீச்சை பொறுத்தவரை கெயில் ஜேமிசன், கேன் ரிச்சர்ட்சன் பலமாக உள்ளனர். அவர்களுடன் முகமது சிராஜ், வாசிங்டன் சுந்தர், ஆடம் சாம்பா, சஹால், சைனி ஆகியோரும் உள்ளனர். இந்தாண்டு ஜோசுவா பிளிப்பேவுக்கு பதிலாக ஃபின் ஆலன் கொண்டு வரப்பட்டுள்ளதால் விக்கெட் கீப்பிங் ஏரியாவும் சிறப்பாக உள்ளது.

ஆர்.சி.பி பலவீனம்

ஆர்.சி.பி பலவீனம்

பெங்களூரு அணி விராட் கோலி மற்றும் தேவ்தத் பட்டிகல்லை தவிர டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடக்கூடிய இந்திய வீரர்கள் இல்லை. ரூ.14.25 கோடிக்கு எடுக்கப்பட்டுள்ள மேக்ஸ்வெல் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறப்பாக ஆடினாலும் கடந்தாண்டு ஐபிஎல்-ல் மோசமாக விளையாடினார். எனவே இந்தாண்டு அவரது ஆட்டம் பெரிய கேள்வியாக உள்ளது.

பந்துவீச்சில் யுவேந்திர சஹால் கடந்த 2 சீசன்களாக அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. கடைசியாக நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலும் அவர் பெரியளவில் எதும் செய்யவில்லை. இதே போல் நவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோரும் ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் சிறப்பாக செயல்படவில்லை என்பது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆர்.சி.பி அணி

ஆர்.சி.பி அணி

விராட் கோலி ( கேப்டன் ), டிவில்லியர்ஸ், தேவ்தத் பட்டிக்கல், நவ்தீப் சைனி, கேன் ரிச்சர்ட்சன், கெயில் ஜேமிசன், சுயேஷ் பிரபுதேசாய், கே.எஸ்.பாரத், பவன் தேஸ்பாண்டே, வாசிங்டன் சுந்தர், ஹர்சல் பட்டேல், மேக்ஸ்வெல், டான் கிறிஸ்டியன், ராஜட் பட்டிடர், சஹால், சஹாப் அஹ்மத், முகமது சிராஜ், ஆடம் சாம்பா, டேனியல் சாம்ஸ், முகமது அசாரூதீன், சச்சின் பேபி, ஃபின் ஆலன்.

சிறந்த ப்ளேயிங் 11

சிறந்த ப்ளேயிங் 11

விராட் கோலி, தேவ்தத் பட்டிக்கல், டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல், டான் கிறிஸ்ட்டியன், பவன் தேஷ்பாண்டே, வாசிங்டன் சுந்தர், ஹர்சல் பட்டேல், கெயில் ஜேமிசன், முகமது சிராஜ், யுவேந்திர சஹால்

ஆட்டத்தின் கணிப்பு

ஆட்டத்தின் கணிப்பு

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்தாண்டு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் அந்த அணியால் முதல் 4 இடங்களை பிடிக்க முடியும்.

Story first published: Thursday, April 1, 2021, 19:22 [IST]
Other articles published on Apr 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+