
கோலி பதவி விலகல்
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக விராட் கோலி இருந்து வந்தாலும், அவரால் இந்தியாவுக்காக ஒரு ஐசிசி கோப்பையை கூட பெற்றுக்கொடுக்க முடியவில்லை. சாம்பியன்ஸ் டிராபி, 50 ஓவர் உலகக்கோப்பை தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் என முக்கிய கட்டங்களில் கோலியின் கேப்டன்சி சொதப்பிவிடுகிறது. இதன் காரணமாக வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளார்.

புகழாரம்
விராட் கோலியின் இந்த முடிவு குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். எந்தவித சுயநல எண்ணமும் இன்றி கேப்டன் பதவியை துறந்துள்ளார் என புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டன் பதவிக்கும் ஆப்பு வந்துள்ளது.

ஐபிஎல்-லும் சிக்கல்
ஐசிசி கோப்பைகளை போன்றே ஐபிஎல் கோப்பையையும் விராட் கோலி தலைமை தாங்கும் ஆர்சிபி அணி ஒரு முறை கூட வென்றதில்லை. ஒவ்வொரு முறையும் வெற்றிகளை குவித்த போதும், முக்கியமான ப்ளே ஆஃப் சுற்றுகளின் போது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணி வெளியேறிவிடுகிறது. எனவே கோப்பையை வென்று கொடுக்க முடியாததால் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் இந்தாண்டு கோலி விலகுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நம்பிக்கை
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி எப்போதும் இல்லாத அளவிற்கு மிகச்சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. வழக்கமாக பந்துவீச்சில் சொதப்பும் அந்த அணி இந்த முறை பலமான பந்துவீச்சு படையுடன் உள்ளது. இதன் காரணமாக இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை பெற்று அசத்தியுள்ளது. இந்தாண்டு நிச்சயம் கோப்பையை வென்றுவிடும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். ஒருவேளை கோப்பை வெல்லவில்லை என்றால் கோலி பதவி விலகிவிடுவார் என்றும் நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











