For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் சுத்தமா சரியில்ல.. சோகத்தில் இருக்கும் மோர்கனுக்கு எரிச்சலை கிளப்பும் சேவாக்.. ஏன் இந்த தாக்கு?

மும்பை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியடைந்த நிலையில் கேப்டன் மோர்கன் மீது முன்னாள் வீரர் சேவாக் கடும் விமர்சனங்களை வைத்துள்ளார்.

Recommended Video

IPL போட்டிகளில் சாதனை படைத்த பின்னர் Amit Mishra கேட்ட உதவி.. Sehwag சொன்ன உருக்கமான தகவல்

நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 220/3 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 தொடக்கம் சொதப்பல்

தொடக்கம் சொதப்பல்

220 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் முதல் 5 விக்கெட்டுகள் 31 ரன்களுக்குள் சரிந்தது. பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஜோடி சிஎஸ்கே பவுலர்களுக்கு தலைவலி கொடுத்தனர். அதிரடியாக ஆடிய ரஸல் 54 ரன்களுக்கும், தினேஷ் கார்த்திக் 40 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

தோல்வி

தோல்வி

பின்னர் வந்த ஆல்ரவுண்டர் பேட் கம்மின்ஸ் ஒற்றை ஆளாக போராடினார். அதிரடியாக ஆடிய அவர் 34 பந்துகளில் 66 ரன்களை விளாசினார். இதில் 6 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளும் அடங்கும். எனினும் அவரின் போராட்டம் பலனிக்கவில்லை. கடைசி ஓவரில் கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

விமர்சனம்

விமர்சனம்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சேவாக், என்னை பொறுத்தவரை இயான் மோர்கன் ஒரு சிறந்த டி20 கேப்டன் கிடையாது. ஒருநாள் போட்டிகளில் அவர் சிறந்த கேப்டனாக இருக்கலாம். ஏனெனில் அவரின் இங்கிலாந்து அணி பலமான ஒன்றாக உள்ளது. அதில் யாரேனும் ஒருவர் அல்லது இருவர் சிறப்பாக பேட்டிங் அல்லது பவுலிங் செய்தால் கூட வெற்றியை தேடி தருவார்கள். ஆனால் ஐபிஎல்-ல் அவருக்கு அப்படி ஒரு அணி அமையவில்லை.

சிறந்த அணி இல்லை

சிறந்த அணி இல்லை

அதே போல அவர் டி20 போட்டிகளில் சிறப்பாக கேப்டன்சி செய்வது போலவும் தெரியவில்லை. ஒரு அணியை வைத்துதான் சிறந்த கேப்டன்சி இருக்கும். ஒருவேளை அவர் அடுத்தாண்டு சிறந்த அணியுடன் வந்து, குறைந்தது 2 பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுவது, அல்லது 2 பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டால் அது ஒரு சிறந்த அணியாக இருக்கும். ஆனால் தற்போதைக்கு மோர்கன் நல்ல கேப்டன் கிடையாது என தெரிவித்தார்.

Story first published: Thursday, April 22, 2021, 17:45 [IST]
Other articles published on Apr 22, 2021
English summary
Virender Sehwag Criticize Eoin Morgan's Captaincy in T20 after KKR loss match against CSK
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+