Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரு பெரும் சிங்கங்கள் எண்ட்ரி.. பேபி டிவில்லியர்ஸும் வருகை.. களைக்கட்டும் மும்பை - கொல்கத்தா போட்டி!

மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் இரு பெரும் சிங்கங்கள் எண்ட்ரி கொடுத்துள்ளதால் களைக்கட்டியுள்ளது.

புனே மைதானத்தில் நடைபெறும் 14வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள போதும் இந்த முடிவை எடுத்துள்ளது.

முக்கிய வீரர் வருகை

முக்கிய வீரர் வருகை

நடப்பு தொடரில் முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, பக்கா மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. கடந்த 2 போட்டிகளில் மிடில் ஆர்டர் பிரச்சினையாக இருந்தது. எனவே அதனை சரி செய்ய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் எண்ட்ரி கொடுத்துள்ளார். கையில் ஏற்பட்ட காயம் முழுவதுமாக சரியாகி பழைய ஃபார்மில் உள்ளார்.

பேபி டிவில்லியர்ஸ் வருகை

பேபி டிவில்லியர்ஸ் வருகை

இதே போல மற்றொரு மாற்றமும் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து சொதப்பி வந்த டிம் டேவிட்டிற்கு மாற்றாக தென்னாப்பிரிக்காவின் டேவால்ட் பிரேவிஸ் கொண்டு வரப்பட்டுள்ளார். இவர் பேபி ஏபி டிவில்லியர்ஸ் என செல்லமாக அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா அணி மாற்றம்

கொல்கத்தா அணி மாற்றம்

கொல்கத்தா அணியிலும் முக்கிய மாற்றம் வந்துள்ளது. அந்த அணியில் முன்னணி பவுலராக இருக்கும் டிம் சவுத்திக்கு மாற்று வீரராக பேட் கம்மின்ஸ் களமிறக்கப்பட்டுள்ளார். கம்மின்ஸ் எப்போது வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நல்ல பிட்ச்-ல் களம் கண்டுள்ளார். இதே போல ஷிவம் மாவிக்கு பதிலாக ரஷிக் சலாம் வாய்ப்பு பெற்றுள்ளார்

Recommended Video

IPL 2022 MI vs KKR Match Talking Points | Cummins | Daniel Sams | Suryakumar | OneIndia Tamil
 ப்ளேயிங் 11 விவரங்கள்

ப்ளேயிங் 11 விவரங்கள்

மும்பை ப்ளேயிங் 11 : ரோகித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கெயீரன் பொல்லார்ட், டேவால்ட் பிரேவிஸ், முருகன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, டைமல் மில்ஸ், பாசில் தாம்பி

கொல்கத்தா ப்ளேயிங் 11: அஜிங்கியா ரகானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர், சாம் பில்லிங்ஸ், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸல், சுனில் நரேன், பேட் கம்மின்ஸ், உமேஷ் யாதவ், ரஷிக் சலாம், வருண் சக்கரவர்த்தி

Story first published: Wednesday, April 6, 2022, 20:17 [IST]
Other articles published on Apr 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+