Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

9 பவுலர்களுடன் ப்ளேயிங் 11.. பஞ்சாப்பை பழிதீர்க்க கே.எல்.ராகுல் நூதன வியூகம்.. அந்த பவுலரும் உள்ளார்

மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இதுவரை இல்லாத வகையில் புதிய திட்டத்துடன் லக்னோ களமிறங்கியுள்ளது.

ஐபிஎல் தொடரின் இந்த 42வது லீக் போட்டி புனேவில் உள்ள மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் மயங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

 கே.எல்.ராகுலின் முனைப்பு

கே.எல்.ராகுலின் முனைப்பு

கடந்த சீசன் வரை பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல், தற்போது அதே அணியை எதிர்த்து நின்றுள்ளார். அந்த அணி நிர்வாகத்தை பழித்தீர்க்கவும் முனைப்புடன் உள்ளார். இதே போல இன்று பஞ்சாப் அணியை வீழ்த்தினால் தான் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்த முடியும். இதற்காக பக்கா ப்ளேயிங் 11 உடன் களமிறங்கியுள்ளார்.

9 பந்துவீச்சாளர்கள்

9 பந்துவீச்சாளர்கள்

அதாவது லக்னோ அணியின் ப்ளேயிங் 11ல் மொத்தமாக 9 பவுலர்கள் களம் காணுகின்றனர். குயிண்டன் டிக்காக் மற்றும் கே.எல்.ராகுலை தவிர்த்து மற்ற அனைவரும் முன்னணி பவுலர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் ஆகும். இவர்களை வைத்து எப்படிபட்ட இக்கட்டான சூழலையும் சமாளிக்கலாம். இந்த போட்டிக்கு இளம் புயல் ஆவேஷ் கானையும் மீண்டும் அணிக்குள் சேர்த்துள்ளனர். இதனால் இன்றைய போட்டி அனல் பறக்கப்போகிறது.

 ப்ளேயிங் 11 மாற்றம்

ப்ளேயிங் 11 மாற்றம்

லக்னோ அணி : குயிண்டன் டிக்காக், கே.எல்.ராகுல், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆயுஸ் பதோனி, க்ருணால் பாண்ட்யா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னாய், ஆவேஷ் கான், மோஷின் கான்

பஞ்சாப் அணி: மயங்க் அகர்வால், ஷிகர் தவான், பனுக்கா ராஜபக்சே, ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்க்ஸ்டன், ஜித்தேஷ் ஷர்மா, ரிஷி தவான், ககிஸ்கோ ரபாடா, ராகுல் சஹார், சந்தீப் சர்மா, அர்ஷ்தீப் சிங்

 அதிக எதிர்பார்ப்பு

அதிக எதிர்பார்ப்பு

இதுவரை 8 போட்டிகளில் விளையாடி லக்னோ அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலும், பஞ்சாப் அணி 4 வெற்றிகளுடன் 7வது இடத்திலும் உள்ளது. இன்றைய போட்டியின் முடிவு புள்ளிப்பட்டியலில் முக்கிய மாற்றங்களை கொண்டு வரலாம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

Story first published: Friday, April 29, 2022, 20:32 [IST]
Other articles published on Apr 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+