Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புள்ளிப்பட்டியலில் மெகா மாற்றம்.. சிஎஸ்கே-ஆர்சிபி வெற்றி.. டாப் அணிகளுக்கு சிக்கல்..ப்ளே ஆஃப் கணக்கு

மும்பை: சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளின் வெற்றியால் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

Dhoniயின் Epic Reply: 'Playoff போகலனா உலகம் அழிஞ்சிராது' | CSK vs DC | OneIndia Tamil

ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் இறுதிகட்டத்தை எட்டிவிட்டன. எந்தெந்த அண்கள் ப்ளே ஆஃப் செல்லும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அதனை கிட்டத்தட்ட உறுதி செய்வதற்கான போட்டிகள் தான் நேற்றைய தினம் நடைபெற்றது.

டாப் 4 இடங்கள்

டாப் 4 இடங்கள்

புள்ளிப்பட்டியலில் ஏற்கனவே லக்னோ மற்றும் குஜராத் அணிகள் 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. ராஜஸ்தான் அணி 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டியில் ஒரு வெற்றி பெற்றால் கூட ப்ளே ஆஃப் செல்லும். இதே போல 4வது இடத்தில் உள்ள ஆர்சிபி அணி மீதமுள்ள 2 போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றால் கூட 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிடும்.

3 அணிகளுக்கு தலைவலி

3 அணிகளுக்கு தலைவலி

இந்த ரேஸில் இருந்த டெல்லி, ஐதராபாத், பஞ்சாப் அணிகளுக்கு தலைவலி உருவாகிவிட்டது. டெல்லி அணி சிஎஸ்கேவுடன் தோற்றுவிட்டது. பஞ்சாப் அணி ராஜஸ்தானுடன் தோற்றுவிட்டது. ஐதராபாத் அணி ஆர்சிபியிடம் தோற்றுவிட்டது. இந்த 3 அணிகளுமே தற்போது வரை 11 போட்டிகளில் ஆடி 5 வெற்றிகளுடன் உள்ளது. எனவே மீதமுள்ள 3 போட்டியில் ஒன்றில் தோற்றால் கூட ப்ளே ஆஃப் செல்ல முடியாது.

ஒருவேளை வென்றுவிட்டால்

ஒருவேளை வென்றுவிட்டால்

ஒருவேளை இந்த 3 அணிகளில் ஏதேனும் ஒரு அணியாவது 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளையும் பெற்றுவிட்டால், அது ஆர்சிபி அணிக்கு தான் சிக்கல். 4வது இடத்தில் உள்ள ஆர்சிபி தனக்கு மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் இடத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ரன்ரேட் அடிப்படையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

சிஎஸ்கே ப்ளே ஆஃப் வாய்ப்பு

சிஎஸ்கே ப்ளே ஆஃப் வாய்ப்பு

இது ஒருபுறம் இருக்க, சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா அணிகள் ஏற்கனவே ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டன. கணக்குகளின் அடிப்படையில் ப்ளே ஆஃப் வாய்ப்புகள் இருந்தாலும், அவை நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவாக இருப்பது தான் உண்மை.

Story first published: Monday, May 9, 2022, 10:42 [IST]
Other articles published on May 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+