Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றிக்கு அருகில் சென்று தோல்வி..கே.எல்.ராகுலின் மாஸ்டர் ப்ளான்.. கடைசி நேரத்தில் சரிந்த ஐதராபாத்!

மும்பை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 12வது லீக் ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய லக்னோ அணிக்கு பேட்டிங்கில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்கமே பின்னடைவு

தொடக்கமே பின்னடைவு

தமிழக வீரர் வாஷிங்டன் வீசிய ஓவரில் ஓப்பனிங் வீரர் குயிண்டன் டிக்காக் மற்றும் முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய எவின் லீவிஸ் ஆகியோர் ஒரு ரன்னுக்கு அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் வந்த மணிஷ் பாண்டே 11 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார். இதனால் அந்த அணி 27 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

கேப்டனின் பார்ட்னர்ஷிப்

கேப்டனின் பார்ட்னர்ஷிப்

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கே.எல்.ராகுல் - தீபக் ஹூடா ஜோடி சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தினர். எனினும் கடைசி வரை நீடிக்கவில்லை. 3வது விக்கெட்டிற்கு இவர்கள் 87 ரன்களை சேர்த்தனர். கே.எல்.ராகுல் 68 ரன்களையும் ஹுடா 51 ரன்களையும் எடுத்து வெளியேறினர். பின்னர் வந்த ஆயுஸ் பதோனி 19 ரன்கள் அடிக்க 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை சேர்த்தது.

 சொதப்பிய வில்லியம்சன்

சொதப்பிய வில்லியம்சன்

இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி சீரான வேகத்தில் விக்கெட்களை இழந்தது. தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா (13), கேப்டன் வில்லியம்சன் (16) ஆகியோர் ஆவேஷ் கானின் வேகத்தில் சிக்கி வெளியேறினர். பின்னர் வந்த எய்டன் மர்க்ரம் 12 ரன்களுக்கு அவுட்டானார். மறுமுணையில் தூண் போல் நின்ற ராகுல் திரிபாதி 30 பந்துகளில் 44 ரன்களை அடிக்க ஐதராபாத் அணி 95 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது.

 பூரணின் தாண்டவம்

பூரணின் தாண்டவம்

பார்ட்னர்ஷிப் இருந்தால் தான் வெற்றி என்ற நிலை இருந்த போது நிகோலஸ் பூரண் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தனர். பூரண் அதிரடியாக 24 பந்துகளை சந்தித்து 34 ரன்களை வேகமாக உயர்த்தினார். அப்போதுதான் ஆவேஷ் கான் மீண்டும் ஒரு விக்கெட் எடுத்து திருப்புமுணை கொடுத்தார். இதனால் கடைசி 12 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி ட்விஸ்ட்

கடைசி ட்விஸ்ட்

இந்த சமயத்தில் சாதூர்யமாக செயல்பட்ட கே.எல்.ராகுல், ஹோல்டர் மற்றும் ஆவேஷ் கானுக்கு சுழற்சி முறையில் பவுலிங் தந்தார். இதனால் அப்துல் சமாத் (0), ரொமேரியோ செஃபெர்ட் 8, புவனேஷ்வர் குமார் 1 என அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 157 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் ஐதராபாத் பெரும் 2வது தோல்வி இதுவாகும்.

Story first published: Monday, April 4, 2022, 23:45 [IST]
Other articles published on Apr 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+