Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் பிளே ஆப்பில் அதிரடி மாற்றம்? முதல் 5 இடங்கள் பிடிக்கும் அணிக்கு வாய்ப்பு? பிசிசிஐ அவசர ஆலோசனை

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் இம்முறை 10 அணிகள் பங்கேற்கிறது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு 4 அணிகள் தான் செல்ல முடியும் என்பதால் அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

8 அணிகள் பங்கேற்கும் போது 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலை இருந்த போது,அதில் நியாயம் இருந்தது.

ஆனால் தற்போது 10 அணிகள் மோதும் போது, அதே 4 இடம் என்றால் எப்படி நியாயம் என்று ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் கேள்வி எழுப்பினர்.

பிசிசிஐக்கு நஷ்டம்

பிசிசிஐக்கு நஷ்டம்

4 அணிகள் தான் பிளே ஆப் வாய்ப்பு என்றால் , புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் 3 அணிகளுக்கு இப்போதே பிளே ஆப் வாய்ப்பு இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், அந்த அணிகள் விளையாடும் போட்டியை ரசிகர்கள் இனி பார்க்க மாட்டார்கள். இது பிசிசிஐக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.

பிளே ஆப் மாற்றம்?

பிளே ஆப் மாற்றம்?

இதனால் பிளே ஆப்பில் அதிரடி மாற்றத்தை கொண்டு வர பிசிசிஐ யோசித்து வருகிறது. அதன் படி முதல் 5 இடங்கள் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும். பிளே ஆஃப் சுற்று போட்டிகள் எலிமினேட்டர், குவாலிபையர், நாக் அவுட், சேலஞ்ச்சர் மற்றும் இறுதிப் போட்டி என்ற வடிவில் நடைபெறும். முதலில் எலிமினேட்டர் போட்டி நடைபெறும். இதில் 4வது மற்றும் 5வது இடத்தை பிடித்த அணிகள் மோதும். இதில் தோற்கும் அணி வெளியேறிவிடும். (வெற்றி பெறும் அணி நாக் அவுட் போட்டிக்கு செல்லும்.)

புதிய வடிவம்

புதிய வடிவம்

அதன் பிறகு குவாலிபையர் நடைபெறும், இதில் முதல் 2 இடத்தை பிடிக்கும் அணி மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும். (தோற்கும் அணி சேலஞ்சுர் போட்டிக்கு செல்லும்)அதன் பிறகு நாக் அவுட் போட்டி நடைபெறும் இதில் எலிமினேட்டரில் வெல்லும் அணியும், 3வது இடத்தை பிடித்த அணியும் மோதும்.

பிசிசிஐ ஆலோசனை

பிசிசிஐ ஆலோசனை

அதன் பிறகு சேலஞ்சர் என்ற போட்டி நடைபெறும். இதில் குவாலிபையரில் தோற்ற அணியும், நாக்அவுட்டில் வென்ற அணியும் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் மோதும். இந்த புதிய மாற்றத்தின் மூலம் 5வது இடத்தை பிடிக்கும் அணி கூட கோப்பையை வெல்ல முடியும். இந்த நடைமுறையில் தான் பிக் பேஷ் லீக் போட்டிகள் நடைபெறுகிறது. தற்போது இந்த நடைமுறையை நடப்பு ஆண்டிலேயே கொண்டு வரலாமா இல்லை, அடுத்த சீசனில் கொண்டு வரலாமா என்று பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.

Story first published: Tuesday, April 26, 2022, 16:38 [IST]
Other articles published on Apr 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+