Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரூ.7000 கோடி முதல் ரூ.10000 கோடி..? மலைக்க வைக்கும் புதிய ஐபிஎல் அணியின் ஏலத் தொகை!

அமீரகம்: ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகளை கொண்டு வருவதன் மூலம் ரூ.20,000 கோடி வரை லாபம் ஈட்ட பிசிசிஐ மெகா ப்ளான் போட்டுள்ளது.

Recommended Video

IPL 2022: மலைக்க வைக்கும் Teams Auction Price | OneIndia Tamil

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் இணைக்கப்படவிருப்பதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அந்த இரண்டு அணிகளையும் ஏலம் விட்ட பிறகு எந்த ஊரை மையமாக கொண்டிருக்கும் என்ற அறிவிப்புகள் வெளியாகவுள்ளது.

ஏலம் விடும் தேதி

ஏலம் விடும் தேதி

இந்த 2 அணிகளையும் வாங்குவதற்கான ஏலம் இன்று துபாயில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான IIT எனப்படும் விண்ணப்ப படிவங்களை 22 பெரும் நிறுவனங்கள் வாங்கியுள்ளன. இதனை ரூ. 10 லட்சம் கொடுத்து வாங்கியிருந்தால் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். ஏலம் வாங்குவதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. ஏலம் எடுக்கும் தனி நபரோ அல்லது நிறுவனமோ ஆண்டுக்கு குறைந்தது ரூ.2000 கோடி வருமானம் ஈட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப விநியோகம்

விண்ணப்ப விநியோகம்

இதனையடுத்து 2 புதிய அணிகளையும் வாங்குவதற்காக இந்தியாவை சேர்ந்த பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டிப்போட்டு வருகின்றன. ஏற்கனவே அதானி குழுமம், ஆர்பி சஞ்சீவ் கோங்கே உள்ளிட்ட நிறுவனங்கள் தீவிர முனைப்புடன் உள்ளது. இதே போன்று அயல்நாட்டை சேர்ந்த பணம் முதலீட்டு நிறுவனங்களும் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன.

பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ திட்டம்

புதிய ஐபிஎல் அணிகளை வாங்குவதற்கு ஏலத்தின் ஆரம்பத் தொகையாக ரூ.2000 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த ஆரம்ப தொகையானது ரூ.1700 கோடிதான் முடிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் மாற்றப்பட்டது. இந்நிலையில் ஒவ்வொரு அணியையும் ரூ.7000 கோடி முதல் ரூ.10,000 கோடி வரை வருமானம் ஈட்ட பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

2 அணிகள்

2 அணிகள்

இந்த அணிகளை ஏலம் வாங்க பல அணிகள் போட்டி போட்டாலும் அதானி குழுமம் மற்றும் ஆர்பிஎஸ்ஜி குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோங்கா ஆகியோர் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். அதாவது அகமதாபாத் அணியை அதானி குழுமமும், லக்னோ அணியை சஞ்சீவ் கோங்காவும் ஏலம் எடுப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம்.

Story first published: Monday, October 25, 2021, 15:21 [IST]
Other articles published on Oct 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+