Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடடே.. இவரா இப்படி சொன்னாரு.. விராட் கோலியின் மோசமான ஃபார்ம்.. கங்குலி பேச்சால் ரசிகர்கள் ஆச்சரியம்!

மும்பை: விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஃபார்ம் குறித்து சவுரவ் கங்குலி வெளிப்படையாக பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் ஃபார்ம் அவுட்டில் இருந்த வீரர்கள் இந்த முறை கம்பேக் கொடுத்துள்ளனர். முன்னணி வீரர்கள் சொதப்பி வருகின்றனர்.

கோலியின் பரிதாபம்

கோலியின் பரிதாபம்

இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியும், தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவும் முக்கியமானவர்கள். இவர்கள் இருவருமே மோசமான ஃபார்மில் இருக்கின்றனர். ஆர்சிபிக்காக விளையாடும் விராட் கோலி இதுவரை 9 இன்னிங்ஸ்களில் 129 ரன்களும், மும்பை அணிக்காக விளையாடும் ரோகித் சர்மா 8 போட்டிகளில் 153 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். இது ரசிகர்களுக்கு கவலையளிக்கும் வகையில் உள்ளது.

கங்குலி அறிவுரை

கங்குலி அறிவுரை

இவர்களின் ஃபார்ம் குறித்து கவாஸ்கர் முதல் ரவி சாஸ்திரி வரை அட்வைஸ் கூறியிருந்தனர். இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வாய்த்திறந்துள்ளார். அதில், அவர்கள் இருவருமே மிகச்சிறந்த வீரர்கள், கண்டிப்பாக மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார்கள். கூடிய விரைவில் அவர்கள் ரன் குவிப்பதை நீங்கள் பார்ப்பதை பார்ப்பீர்கள்.

கோலிக்கு ஸ்பெஷல் அட்வைஸ்

கோலிக்கு ஸ்பெஷல் அட்வைஸ்

விராட் கோலி குறித்து பேசிய அவர், கோலியின் தலைக்குள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். கோலி குறித்து கங்குலி நம்பிக்கையாக பேசியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு திட்டம்

ஓய்வு திட்டம்

இது ஒருபுறம் இருக்க, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவருக்குமே ஐபிஎல் முடிந்தவுடன் சில காலம் ஓய்வு கொடுக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதாவது இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுடன் 5 டி20 போட்டிகளில் மோதுகிறது. இதில் இவர்கள் இருவரும் பங்குபெற மாட்டார்கள் எனக்கூறப்படுகிறது. இவர்களுடன் பும்ராவும் பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 29, 2022, 16:40 [IST]
Other articles published on Apr 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+