Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் -ல் மீண்டும் ஒரு புதிய பரிசுத்தொகை.. அதுவும் ரூ.1.25 கோடி அறிவிப்பு.. யாருக்கு தெரியுமா??

மும்பை: ஐபிஎல் முடிந்த பிறகும் ரூ.2.5 கோடி அளவுக்கு புதிய பரிசுத்தொகைகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.

கடந்த 2 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் கோப்பை வென்றது.

ஐபிஎல் பரிசுத்தொகை

ஐபிஎல் பரிசுத்தொகை

இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட பல்வேறு வீரர்களுக்கும் பரிசுகள் வாரி வழங்கப்பட்டன. குஜராத் அணிக்கு ரூ.20 கோடி, ராஜஸ்தான் அணிக்கு ரூ. 13 கோடி வழங்கப்பட்டது. இதே போன்று ஜாஸ் பட்லர், யுவேந்திர சாஹல், தினேஷ் கார்த்திக், உம்ரான் மாலிக் உள்ளிட்ட பலருக்கும் தனிப்பட்ட பரிசுத்தொகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதில் பட்லர் தான் அதிகபட்சமாக ரூ.60 லட்சத்தை எடுத்துச் சென்றார்.

பிசிசிஐ புதிய அறிவிப்பு

பிசிசிஐ புதிய அறிவிப்பு

இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஐபிஎல் தொடர் இவ்வளவு சிறப்பாக நடைபெற காரணமாக இருந்த மைதான ஊழியர்களுக்கு ரூ.1.25 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. வான்கடே, பிராபோர்ன், DY பாட்டில் மைதானம், மற்றும் புனே ஆகிய 4 மைதான ஊழியர்களுக்கு தலா ரூ. 25 லட்சம் தரப்படவுள்ளது. கொல்கத்தா மற்றும் அகமதாபாத் மைதான ஊழியர்களுக்கு தலா ரூ.12.5 லட்சம் தரப்படவுள்ளது.

வித்தியாசம் ஏன்

வித்தியாசம் ஏன்

ஐபிஎல்-ன் 70 லீக் போட்டிகளும் மேற்கூறிய 4 மைதானங்களில் தான் நடைபெற்றது. ப்ளே ஆஃப் போட்டிகள் மட்டுமே அகமதாபாத் மற்றும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானங்களில் நடைபெற்றன. எனினும் பயோ பபுள், பிட்ச் கண்டிஷன்கள் என அனைத்திலும் ஊழியர்கள் சிறப்பான பணியை செய்திருந்தனர்.

ஜெய்ஷாவின் பதிவு

ஜெய்ஷாவின் பதிவு

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிசிசிஐ செயல் அதிகாரி ஜெய் ஷா, ஐபிஎல் தொடரில் நம் அனைவருக்கும் சிறப்பான போட்டியை காண்பிக்க, பல ஹீரோக்கள் பணிபுரிந்துள்ளனர். அவர்களின் கடின உழைப்பை பாராட்டி பரிசுத்தொகை வழங்குவதில் பிசிசிஐ சார்பில் பெருமைக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, May 31, 2022, 22:36 [IST]
Other articles published on May 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+