Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஜடேஜாவுக்கு சிக்கல் உறுதி..” ஒரே நேரத்தில் 4 பணிகள் செய்யனும்.. தோனி எடுத்த முடிவு தவாறா??

சிஎஸ்கே அணியின் கேப்டன் விவகாரத்தில் தோனி தவறு செய்துவிட்டாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கையில் தான், நேற்று திடீரென சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார். புது கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

தோனி முடிவு தவறா?

தோனி முடிவு தவறா?

கடந்த 2012ம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியில் தோனியுடன் பயணித்து வருகிறார். இதனால் தான் அவர் மீது பெரும் நம்பிக்கை வைத்து தோனியே கேப்டன் பதவியை தூக்கி கொடுத்துள்ளார். இதற்காக தான் ஜடேஜாவை கடந்த சீசனில் பேட்டிங்கில் முன்கூட்டியே களமிறக்கி பயிற்சி தந்து வந்தார். ஆனால் இவை தவறான முடிவாக கூட போக வாய்ப்புள்ளது.

 தோனி தயார்படுத்திய விதம்

தோனி தயார்படுத்திய விதம்

சென்னை அணியில் நீண்ட வருடங்களாக பவுலராக மட்டுமே ஜடேஜா செயல்பட்டு வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக தோனியின் அறிவுறுத்தலின் படி அவர் செய்யும் பேட்டிங் தனி கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ஆர்சிபிக்கு எதிராக கடைசி ஓவரில் அவர் ஆடிய ருத்ர தாண்டவம் அடுத்த தோனி என்று பாராட்டும் அளவிற்கு கொண்டு சென்றது.

ஜடேஜாவுக்கான சிக்கல்

ஜடேஜாவுக்கான சிக்கல்

இதனால் பேட்டிங் மற்றும் பவுலிங் என சிஎஸ்கேவின் முக்கிய பொறுப்புகள் அவரின் மீது விழுந்துள்ளன. இதே போல அந்த அணிக்காக மிக முக்கியமான இடங்களில் டைவ் அடித்து கேட்ச் பிடிப்பது ஜடேஜா தான். இப்படி இந்த மூன்று சுமைகளும் அவர் மீது இருக்க, கேப்டன் பதவி கூடுதல் சுமையாக வந்து சேர்ந்துள்ளது.

கடும் அபாயம்

கடும் அபாயம்

தோனி கூட விக்கெட் கீப்பிங், பேட்டிங், கேப்டன்சி என 3 விஷயங்களை மட்டுமே செய்தார். ஆனால் ஜட்டு ஒரே நேரத்தில் 4 விஷயங்களை கையாள வேண்டிய சூழல் இருக்கும். இது அவருக்கு கடும் மன அழுத்ததை ஏற்படுத்தக்கூடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் அவரின் பவுலிங் ஃபார்மும் சரிவை சந்திக்கக்கூடலாம். இதனை ஏன் தோனி யோசிக்கவே இல்லை என்ற கேள்வி எழுகிறது.

ஜடேஜாவின் விளக்கம்

ஜடேஜாவின் விளக்கம்

கேப்டன் பதவி குறித்து பேசியிருந்த ஜடேஜா, எனது சகோதரர் தோனி மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இதனை நான் சொதப்பிவிடாமல் மேம்படுத்தி கொண்டு செல்ல வேண்டும். அவர் உடன் இருப்பதால், எனது பணி சுலபமாக இருக்கும் என நினைக்கிறேன் எனக்கூறியுள்ளார். இதுவே அவருக்கு அழுத்தமாக மாறலாம்.

Story first published: Friday, March 25, 2022, 16:18 [IST]
Other articles published on Mar 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+