
இமாலய இலக்கு
முதல் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய சிஎஸ்கே, நேற்றைய போட்டியில் மிகச்சிறப்பாக செயல்பட்டது. உத்தப்பா 50, மொயீன் அலி 35, ஷிவம் தூபே 49 , அம்பத்தி ராயுடு 27 என சிறப்பாக விளையாடியதால் 211 ரன்களை லக்னோவுக்கு இலக்காக கொடுத்தது. இதில் அடித்த 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.

லக்னோவின் சிக்ஸர் மழை
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி தொடக்கம் முதலே சிக்ஸர் மழை பொழிந்தது. தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் (40) மற்றும் குயிண்டன் டிக்காக் (61) மட்டும் முதல் விக்கெட்டிற்கு 99 ரன்களை குவித்தனர். இதன் பின்னர் வந்த எவின் லீவிஸ் 55 ரன்கள் மற்றும் ஆயுஸ் பதோனி 19 ரன்கள் அடிக்க 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

ஜடேஜாவின் விளக்கம்
இந்நிலையில் இந்த தோல்விக்கு பிறகு பேசிய கேப்டன் ஜடேஜா, எங்களுக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தது. ராபின் உத்தப்பா மற்றும் ஷிவம் தூபே மிகச்சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் பேட்டிங்கை போன்று ஃபீல்டிங்கில் எங்களால் செயல்பட முடியவில்லை. களத்தில் சிறிது நேரத்திலேயே அதிக பனிப்பொழிவு வரத்தொடங்கி விட்டது.

ஜடேஜா குற்றச்சாட்டு
பனிப்பொழிவால், பந்து கையில் கூட நிற்கவில்லை, நழுவிக்கொண்டே இருந்தது. இனி ஈரமான பந்துடன் பவுலிங் செய்ய பயிற்சி எடுக்கவுள்ளோம். இதுபோன்ற கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டும். கேட்ச்கள் தான் நமக்கு வெற்றி தரும். அந்தவகையில் இன்று 2 கேட்ச்கள் விடப்பட்டுள்ளன. அதுவும் தோல்விக்கு காரணமாக அமைந்தது. எனவே அதில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளோம் எனத்தெரிவித்தார்.

சீனியர் வீரர் தான் காரணம்
ஜடேஜா கூறிய கேட்ச் பிரச்சினைக்கு காரணம் மொயீன் அலி மற்றும் ஷிவம் தூபே தான். குயிண்டன் டிக்காக் 30 ரன்களில் இருந்த போது, பிராவோ வீசிய பந்தில் கேட்ச் கொடுத்தார். ஆனால் சீனியர் வீரர் மொயின் அலி அதனை தவறவிட்டார். இதன் விளைவு குயின்டன் டிக்காக் 61 ரன்கள் அடித்து அசத்தினார். இதே போல கே.எல்.ராகுல் கொடுத்த கேட்ச்சை துஷார் தேஷ்பாண்டே வீணடித்தார். அனைவரும் 19வது ஓவரை ஷிவம் தூபே வீசியது தன தோல்விக்கு காரணம் எனக்கூறும் நிலையில் ஜடேஜா கூறியிருப்பது ரசிகர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











