Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் மீண்டும் கொரோனா.. ஒட்டுமொத்த அணியும் குவாரண்டைன்..சிஎஸ்கே போட்டி நடக்குமா

மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் மீண்டும் கொரோனா நுழைந்துவிட்டதால் ஒட்டுமொத்த வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

15வது ஐபிஎல் தொடர் தற்போது 50 லீக் போட்டிகளை தாண்டி ப்ளே ஆஃப் சுற்றுகளை நெருங்கி வருகிறது.

இன்றைய தினம் முக்கிய போட்டியாக இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணிக்குள் கொரோனா

டெல்லி அணிக்குள் கொரோனா

இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கொரோனா தொற்று நுழைந்துள்ளது. ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாகவும் காலையில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும். அந்த வகையில் இன்று டெல்லி அணியில் எடுக்கப்பட்ட சோதனையில் இன்று நெட் பவுலர் ஒருவருக்கு தொற்று உறுதியானது தெரியவந்துள்ளது.

சிஎஸ்கேவுடனான போட்டி

சிஎஸ்கேவுடனான போட்டி

இதனையடுத்து ஒட்டுமொத்த அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அணி வீரர்களுக்கு மீண்டும் ஒரு பரிசோதனை நடத்தப்படும் என்றும், அதன் முடிவுகளை பொறுத்து தான் இன்று இரவு சென்னை அணியுடனான போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2வது முறையாக கொரோனா

2வது முறையாக கொரோனா

நடப்பு சீசனில் டெல்லி அணிக்குள் கொரோனா நுழைவது இது 2வது முறையாகும். இதற்கு முன்னதாக அணியில் பிசியோதெரபிஸ்ட், மிட்செல் மார்ஷ், உள்ளிட்ட 6 பேருக்கு கொரோனா உறுதியானது. அவர்கள் குவாரண்டைன் செய்யப்பட்டு, மீண்டும் போட்டியில் கம்பேக் கொடுத்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் நுழைந்துள்ளது.

Recommended Video

IPL 2022: Salesmenஆக மாறும் Commentators! Star Sportsக்கு எதிர்ப்பு | OneIndia Tamil
இக்கட்டான சூழல்

இக்கட்டான சூழல்

ரிஷப் பண்ட் தலைமையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை பெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் டெல்லி அணி தனது ப்ளே ஆஃப் வாய்ப்பை அதிகப்படுத்தும். ஒருவேளை போட்டி தடைப்பட்டால் புள்ளிப்பட்டியலில் மாற்றங்களை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, May 8, 2022, 13:54 [IST]
Other articles published on May 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+