Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியே இந்த தப்பு பண்ணிட்டாரு? நேற்று இது சரி பண்ணிருந்தா ஜெய்ச்சிருக்கலாம்.. வீழ்ந்தது எப்படி?

மும்பை: ஐபிஎல் தொடரின் 15வது சீசனில், பெங்களுரு அணிக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.

இதன் மூலம் 7வது தோல்வியை பெற்றுள்ள சிஎஸ்கே அணி தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதில் சிஎஸ்கே அணி தெரிந்தோ, தெரியாமலோ பல தவறுகளை செய்துள்ளது. இதனால் வெற்றி பெற வேண்டிய போட்டி கையை நழுவி சென்றுவிட்டது.

டாஸ் தேர்வு

டாஸ் தேர்வு

புனே மைதானத்தில் நடப்பு சீசனில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த அணிகளே அதிக போட்டியில் வென்று இருக்கிறது. அப்படி இருக்க தோனி ஏன் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார் என்று தெரியவில்லை. ஒரு வேளை சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்து இருந்தால், நிலைமையே தலைக்கீழ் மாறி இருக்கும்.

சுழற்பந்துவீச்சு

சுழற்பந்துவீச்சு

சிஎஸ்கே முதல் 5 ஓவர்களை இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் ஷிம்ரஜித் சிங் மற்றும் முகேஷ் சௌத்ரியிடம் வழங்கியது. இதில் ஆர்சிபி அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் அடித்தது நல்ல தொடக்கத்தை அமைத்து கொண்டது. இதற்கு பிறகு மொயின் அலி, ஜடேஜா, தீக்சணாவை வைத்து போட்டியை தோனியை நகர்த்தினார். இதனால் ஆர்சிபியின் ரன் குவிப்பு வேகமும் குறைவாக அமைந்தது.

யுத்தியை மாற்றி இருக்கலாம்

யுத்தியை மாற்றி இருக்கலாம்

ஒரு வேளை தோனி முதல் 3 ஓவரிலோ அல்லது சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து சென்னை அணியின் பவுலிங்கை தொடங்கி இருந்தாலோ, ஆர்சிபியின் தொடக்கமே ஆடி இருக்கும். இதில் கூடுதலாக 20 ரன்களுக்கு மேல் ஆர்சிபிக்கு தானமாக சிஎஸ்கே வழங்கிவிட்டது. இதே போன்று ஆர்சிபியின் கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக்கிற்கு நடுவர் கொடுத்த அவுட், டிஆர்எஸ் உதவியில் மாறியது. அதன் பிறகு கார்த்திக் 2 சிக்சர்களை பறக்கவிட்டார்.

Recommended Video

IPL 2022: Sanga's Cricket Wrap | Dhoniயை திட்டிய Virat Kohli? | Arjun Tendulkar's Debut?|
பேட்டிங் வரிசை மாற்றம்

பேட்டிங் வரிசை மாற்றம்

சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் ரெய்னாவின் இடத்திற்கு தான் மொயின் அலி வந்தார். மொயின் அலியின் அதிரடியால் கடந்த சீசனில் சிஎஸ்கே வென்றது. தற்போது அவரை தூக்கி கடைசியில் தோனி இறக்கிவிட்டார். இதனால் சிஎஸ்கே அணியின் பேட்டிங்கில் நிலையற்ற தன்மை உருவாகிவிட்டது. இது எல்லாம் கேப்டன் தோனி செய்த தவறுகள் ஆகும்.

Story first published: Thursday, May 5, 2022, 20:58 [IST]
Other articles published on May 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+