Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் பதவியிலிருந்து விலக ஜடேஜா முடிவு..? தொடர் தோல்வியால் விரக்தி.. மீண்டும் கேப்டனாகும் தோனி?

மும்பை: ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் சென்னை அணி முதல் முறையாக தொடர்ந்து 4 போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.

Recommended Video

CSK, MI தொடர் தோல்வி.. | 'பன்றதெல்லாம் அவரு, பேரு மட்டும் எனக்கா? '| Oneindia Tamil

இதுவரை ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே தொடர்ந்து 4 போட்டியில் தோல்வி அடைந்தது இதுவே 2வது முறை. அவ்வளவு ஏன் சிஎஸ்கேவின் மோசமான சீசனாக பார்க்கப்படும் 2020ஆம் ஆண்டில் கூட சிஎஸ்கே இப்படி ஒரு தோல்வியை பதிவு செய்யவில்லை.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் கனவு கிட்டதட்ட கானல் நீராகி விட்டது.

பிளே ஆப் வாய்ப்பு

பிளே ஆப் வாய்ப்பு

நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ஒரு அணி சீசன் தொடக்கத்தில் தொடர்ந்து 4 போட்டியில் தோல்வி அடைந்தது இதுவே 2வது முறை. மும்பை இந்தியன்ஸ் அணி 2014ஆம் ஆண்டில் இப்படி ஒரு தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது எஞ்சியுள்ள 10 போட்டியில் 8 போட்டியில் வென்றால் மட்டுமே சிஎஸ்கேவில் பிளே ஆப் பந்தயத்தில் இருக்க முடியும்.

சுதந்திரம் இல்லை

சுதந்திரம் இல்லை

ஆனால், ஜடேஜா தலைமையில் அப்படி ஒரு சாதனையை சிஎஸ்கே பெறுமா என்பது சந்தேகமே. கேப்டனாக செயல்பட போதிய சுதந்திரம் ஜடேஜாவிற்கு கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்துள்ளது- பிளேயிங் லெவனை தேர்வு செய்வது, ஃபில்டர்களை நிறுத்துவது, பந்துவீச்சாளர்களுக்கு ஓவர்களை மாற்றுவது என அனைத்திலும் தோனியின் தலையீடு தான் உள்ளது.

ஜடேஜா முடிவு

ஜடேஜா முடிவு

வெறும் டாஸ் போடவும், பேட்டி கொடுக்கவும் மட்டுமே ஜடேஜா கேப்டனாக செயல்படுகிறார். ஆனால் தோல்வி அனைத்துமே ஜடேஜா பெரியல் தான் எழுதப்படுகிறது. இதனால் ஒன்று சுதந்திரம் வழங்க வேண்டும், இல்லை கேப்டன் பதவியை விட்டு விலகி கொள்வதே சரியானதாக இருக்கும் என்று ஜடேஜா முடிவு எடுத்துள்ளார்.

மீண்டும் கேப்டனாகும் தோனி

மீண்டும் கேப்டனாகும் தோனி

இதனால் இந்த சீசன் முடிவதற்குள் ஜடேஜா தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கேப்டனாக தோனியையே செயல்பட முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. சீசன் தொடங்குவதற்கு முன் கேப்டன் பதவியிலிருந்து விலகுவது தவறான முடிவு என்றும், இதனால் சிஎஸ்கேவில் நிலையற்ற தன்மை உருவாகிவிட்டதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால் செய்த தவறை திருத்தி கொள்ள தோனியே மீண்டும் கேப்டன் பதவியை ஏற்க உள்ளதாக சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Sunday, April 10, 2022, 15:44 [IST]
Other articles published on Apr 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+