Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே கேப்டனாக தோனி மீண்டும் பதவியேற்பு.. தொடர் தோல்வியால் ஜடேஜா விலகல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி மீண்டும் பதவியேற்றுள்ள சம்பவம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் தொடக்கத்தில் தோனி தனது கேப்டன் பதவியிலிருந்து விலகிய நிலையில், ஜடெஜா புதிய கேப்டனாக பொறுப்பேற்றார்.

ஆனால் நடப்பு சீசன் சிஎஸ்கே அணி விளையாடிய 8 போட்டியில் 6 தோல்வியை தழுவியுள்ளது.

ஜடேஜா திடீர் முடிவு

ஜடேஜா திடீர் முடிவு

மேலும் கேப்டனாக பொறுப்பேற்ற ஜடேஜாவும், தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கோட்டைவிட்டார். இதனையடுத்து, தனது ஆட்டத்தின் மீது கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் ஜடேஜா கூறியுள்ளார்.

மீண்டும் தோனி

மீண்டும் தோனி

இதனை ஏற்று கொண்ட சிஎஸ்கே நிர்வாகம், தோனியை மீண்டும் கேப்டன் பதவியை ஏற்று கொள்ளும் படி கேட்டு கொண்டனர்.. இதனையடுத்து அணியின் நன்மைக்காக அதனை தோனி ஒப்பு கொண்டுள்ளதாகவும், எஞ்சிய போட்டியில் தோனியே கேப்டனாக செயல்படுவார் என்று சிஎஸ்கே அறிவித்துள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்த இடைப்பட்ட காலத்தில் கேப்டனாக பணியாற்றிய ஜடேஜாவுக்கு சிஎஸ்கே நிர்வாகம் நன்றியை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்தாலும், இதற்கு பருத்தி மூட்டை குடவுனில் இருந்திருக்கலாமே என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பிளே ஆப் வாய்ப்பு

பிளே ஆப் வாய்ப்பு

கேப்டனாக தோனி திரும்புவது நிச்சயம் அணிக்கு நல்லது. எனெனில் கேப்டன்ஷி அழுத்தத்தால் விளையாட முடியாமல் ஜடேஜா திணறும் நிலையில், தற்போது அவரால் பழைய புஸ்பா ஜடேஜாவாக திரும்ப முடியும். பிளே ஆப் சுற்றுக்கு சென்னை செல்ல வேண்டும் என்றால் எஞ்சிய 6 போட்டியில் வென்றாலும, மற்ற அணியின் தயவும் தேவைப்படும். இந்த கடினமான பயணத்தை தோனி முடிப்பாரா. பொறுத்து இருந்து பார்ப்போம்.

Story first published: Saturday, April 30, 2022, 20:07 [IST]
Other articles published on Apr 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+