Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே தோல்விக்கு காரணம்.. கம்பி கட்டுற கதை சொல்லும் ஜடேஜா..காலம் கடந்து போச்சு

மும்பை: நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் 6வது தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சிஎஸ்கே பிளே ஆப்க்கு செல்ல வெறும் 2 சதவீதம் தான் வாய்ப்புள்ளதாக கணித நிபுணர்கள் கணித்துள்ளனர்,

அதாவது எஞ்சிய 6 போட்டியிலும் வென்று, மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி முடிவை பொறுத்து தான் சிஎஸ்கேவின் எதிர்காலம் அமைந்துள்ளது.

எஸ்கேப் ஆன ஜடேஜா

எஸ்கேப் ஆன ஜடேஜா

இந்த நிலையில், பஞ்சாப்க்கு எதிரான ஆட்டத்தில் 3 ஓவரில் 41 ரன்கள் தான் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தும் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. கேப்டன் ஜடேஜா பெரிய ஷாட் ஆடாமல், கடைசி ஓவரின் 5வது பந்தில் சிக்சர் அடித்து ரசிகர்களை வெறுப்பேற்றினார். ஆனால் போட்டி முடிந்து பேசிய ஜடேஜா, தோல்விக்கான காரணம் குறித்து மற்றவர்கள் மேல் பழி சுமத்தி எஸ்கேப் ஆனார்.

கூடுதலாக 15 ரன்கள்

கூடுதலாக 15 ரன்கள்

அப்போது பேசிய ஜடேஜா, போட்டியில் நாங்கள் நன்றாகவே தொடங்கினோம். நல்ல முறையில் பந்துவீசி பஞ்சாப் வீரர்களை கட்டுப்படுத்தினோம். ஆனால் கடைசி கட்டத்தில் கூடுதலாக 15 ரன்களை கொடுத்துவிட்டோம். இறுதி கட்டத்தில் எங்களுடைய பவுலர்கள் நாங்கள் வகுத்த யுத்தியை பின்பற்றவில்லை.

முதல் 6 ஓவர்கள்

முதல் 6 ஓவர்கள்

பஞ்சாப்பை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்திருக்க வேண்டும். ராயுடுவின் பேட்டிங் சிறப்பாக அமைந்தது. பெரிய இலக்கை துரத்தும் போது தொடக்கத்தில் கொஞ்சம் ரன்களை சேர்க்க வேண்டும். ஆனால் நாங்கள் முதல் 6 ஓவரில் போதிய ரன்களை அடிக்கவில்லை. இதனால் நடுவரிசை வீரர்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டது.

உண்மை காரணம்?

உண்மை காரணம்?

முதல் 6 ஓவரை நன்றாக பேட்டிங்கில் ரன் குவிக்க வேண்டும். அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவோம் என்று ஜடேஜா கூறினார். ஆனால் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமே பேட்டிங், பந்துவீச்சில் ஜடேஜா சோபிக்க தவறியது தான். ஆனால், அது குறித்து பேசாமல், மற்றவர்கள் மேல் பழியை போட்டு எஸ்கேப் ஆகிறார் இந்த ராஜபுத்திர இளவரசன்.

Story first published: Tuesday, April 26, 2022, 11:51 [IST]
Other articles published on Apr 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+