For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே Vs மும்பை இன்று மோதல்- இதே நாளில் 3 ஆண்டுக்கு முன் நடந்த சம்பவம்.. பழத்தீர்க்குமா சிஎஸ்கே?

மும்பை: ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ என்று அழைக்கப்படும் சிஎஸ்கே இன்று மீண்டும் 2வது முறையாக பலப்பரீட்சை நடத்துகின்றன.

Recommended Video

IPL 2022 CSK vs MI: முரட்டுத்தனமான மோதல்! Predictable 11 என்ன? | OneIndia Tamil

கடந்த முறை மோதிய போது, இரு அணிகளும் புள்ளி பட்டியலில் எந்த இடத்தில் இருந்ததோ, அதே இடத்தில் தான் தற்போதும் சிஎஸ்கே, மும்பை அணிகள் உள்ளன.

ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த சாம்பியன்கள், தற்போது இக்கட்டான நிலைமையில் உள்ளனர்.

பிளே ஆப் வாய்ப்பு

பிளே ஆப் வாய்ப்பு

மும்பை அணி ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில், சிஎஸ்கே அணி எஞ்சிய 3 போட்டியில் வென்று மற்ற அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் பிளே ஆப்க்கு செல்லும் வாய்ப்பு இன்னும் உள்ளது. ஆனால், மும்பை அணியை எளிதில் மதிப்பிட முடியாது.

மும்பையின் பலம்

மும்பையின் பலம்

ஐபிஎல் வரலாற்றிலேயே சிஎஸ்கே அணியை அதிக முறை வீழ்த்திய ஒரே அணி என்றால் அது மும்பை தான். ரோகித் சர்மா, இஷான் கிஷன் போன்ற அதிரடி வீரர்களும், பும்ரா போன்ற பந்துவீச்சாளர்களும் ஜொலித்தாலே மும்பை அணியின் வெற்றி பிரகாசமாகிவிடும். பொலார்ட் மோசமான ஃபார்ம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொலார்ட் நீக்கம்?

பொலார்ட் நீக்கம்?

இருப்பினும் சிஎஸ்கேக்கு எதிராக மும்பை இந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறது என்றால் அது பொலார்ட் மட்டும் தான் காரணம். இதனால் பொலார்ட்க்கு கடைசியாக ஒரு முறை வாய்ப்பு கிடைக்கலாம். மும்பை அணியில் சூர்யகுமார் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்.

பழித்தீர்க்குமா சிஎஸ்கே?

பழித்தீர்க்குமா சிஎஸ்கே?

சிஎஸ்கே அணியை பொறுத்தவரை டெல்லிக்கு எதிராக பெற்ற வெற்றியுடன் அதே உத்வேகத்தில் உள்ளது. இருப்பினும் கடந்த போட்டியை போல் அதிக ரன்கள் குவித்தால் மட்டுமே மும்பைக்கு நெருக்கடியை அளிக்க முடியும். ஐபிஎல் வரலாற்றில் இதே நாளில் 2019ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதற்கு இம்முறை சிஎஸ்கே பழித்தீர்க்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்

Story first published: Thursday, May 12, 2022, 13:05 [IST]
Other articles published on May 12, 2022
English summary
IPL 2022- CSK Faces Mumbai Indians in Must win match சிஎஸ்கே Vs மும்பை இன்று மோதல்- இதே நாளில் 3 ஆண்டுக்கு முன் நடந்த சம்பவம்.. பழத்தீர்க்குமா சிஎஸ்கே?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+