Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பண்ட்.. வாழ்வா? சாவா? ஆட்டத்தில் ஜடேஜா இல்லை.. என்ன நடந்தது?

மும்பை: ஐபிஎல் தொடரில் வாழ்வா சாவா என்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று டெல்லியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Recommended Video

Ms Dhoni-யிடம் மன்னிப்பு கேட்ட Rishabh Pant என்ன நடந்தது? | OneindiaTamil

டெல்லி அணியில் கொரோனா தொற்று மீண்டும் ஏற்பட்டதால் போட்டி நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்தது.

ஆனால் மீண்டும் நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், மற்ற வீரர்களுக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. இதனால் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுகிறது.

மன்னிப்பு கேட்ட பண்ட்

மன்னிப்பு கேட்ட பண்ட்

இந்த நிலையில், டாஸ் 7 மணிக்கு போடப்படுகிறது என்றால், இரண்டு கேப்டன்களும் தங்களுடைய அணி விவரத்துடன் 3 முதல் 5 நிமிடத்திற்கு முன்னால் வர வேண்டும். ஆனால் ரிஷப் பண்ட் சரியாக 7 மணிக்கு தான் வந்தார். தமக்காக போட்டி நடுவர் மற்றும் தோனி காத்திருந்ததை அறிந்த உடன், நெஞ்சில் கையை வைத்து மன்னிப்பு கேட்டார்.

கேஎஸ் பரத்

கேஎஸ் பரத்

கொரோனா சூழலில் அணி இருப்பதை உணர்ந்து அணி நடுவர் பரவாயில்லை, நீங்க விளையாடினால் போதும் என்ற மாதிரி அழைத்து டாஸ் போட செய்தார். இதில் டாஸ் வென்ற ரிஷப் பண்ட் பந்துவீசுவதாக அறிவித்தார். இந்த போட்டியில் நாங்கள் சேஸ் செய்ய முடிவு எடுத்துள்ளோம் என்று கூறினார். லலித் யாதவ்க்கு பதிலாக அக்சரும், மந்திப் சிங்கிற்கு பதிலாக கேஎஸ் பரத்தும் அணியில் சேர்க்கப்பட்டதாக ரிஷப் பண்ட் கூறினார்.

தோனி ஏமாற்றம்

தோனி ஏமாற்றம்

தோனிக்கு எதிராக விளையாடுவது குறித்து பேசிய ரிஷப் பண்ட், அவரிடம் நிறைய கற்று கொண்டு இருக்கிறேன். தற்போது, அதனை வெளிப்படுத்த முயற்சி செய்வேன் என்று கூறினார். டாஸை இழந்தது குறித்து பேசிய தோனி, அணியில் இருக்கும் குறைகளை கருத்தில் கொண்டு, நாங்களும் முதலில் பந்துவீசுவதாக தான் இருந்தோம். ஆனால் டாஸை நாம் கட்டுப்படுத்த முடியாது என்று கூறினார்.

ஜடேஜா இல்லை

ஜடேஜா இல்லை

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை என்று அவர் கூறினார். அவருக்கு பதிலாக சிவம் துபே விளையாடுகிறார். இதே போன்று பிரிட்டோரியஸ் நீக்கப்பட்டு பிராவோ சிஎஸ்கே அணிக்கு திரும்பியுள்ளார். ஜடேஜா இல்லாதது சிஎஸ்கேக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Story first published: Monday, May 9, 2022, 7:17 [IST]
Other articles published on May 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+