For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்- கடைசி இடத்தை பிடிக்கப்போவது யார்? அவமானத்தை தவிர்க்க சென்னை, மும்பை கடும் போட்டி

மும்பை: ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வதும், பிளே ஆப் சுற்றுக்கு செல்வதும் எவ்வளவு பெருமை என்று அனைவரும் தெரியும்.

அதே போல் கடைசி இடத்தில் நாம் வந்துவிட கூடாது என்று அணிகளும் நினைப்பார்கள். ஏனெனில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது அவமானமாகும்

ஒரு இடத்திற்கு 5 அணிகள் போட்டி... நிர்ணயிக்கப்போகும் 5 போட்டிகள்.. சூடுபிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்! ஒரு இடத்திற்கு 5 அணிகள் போட்டி... நிர்ணயிக்கப்போகும் 5 போட்டிகள்.. சூடுபிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்!

இந்த நிலையில், நடப்பு சீசனில் கடைசி இடத்தை யார் பிடிப்பார்கள் என்ற ழுரம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சென்னை Vs மும்பை

சென்னை Vs மும்பை

அதற்கு காரணம், முன்னாள் சாம்பியன்களான மும்பை அணியும், சென்னை அணியும் தான். சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. மும்பை அணி 13 போட்டியில் விளையாடி 6 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது. இன்றும் இரு அணிகளுக்கும் ஒரு போட்டி எஞ்சிய நிலையில் உள்ளது.

சிஎஸ்கே என்ன செய்யனும்?

சிஎஸ்கே என்ன செய்யனும்?

வெள்ளிக்கிழமை சிஎஸ்கே ராஜஸ்தான் அணிகள் மோதும் ஆட்டமும், சனிக்கிழமை மும்பை, டெல்லி அணிகள் மோதும் ஆட்டமும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். சென்னை 9வது இடத்தில் நீடிக்க வேண்டும் என்றால் ராஜஸ்தான் அணியை வீழ்த்த வேண்டும். வீழ்த்த முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, மோசமான தோல்வியை தழுவ கூடாது.

மும்பை என்ன செய்யனும்?

மும்பை என்ன செய்யனும்?

மும்பை அணி 9வது இடத்தை பிடிக்க வேண்டும் என்றால், ராஜஸ்தான் அணி, சிஎஸ்கேவை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இல்லையேனில் இலக்கை 14வது ஓவருக்குள் ராஜஸ்தான் துரத்த வேண்டும். அதே சமயம், மும்பை அணி டெல்லியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இல்லையேனில், டெல்லி நிர்ணயிக்கும் இல்லை மும்பை 14வது ஓவருக்குள் எளிதில் துரத்த வேண்டும்.

Recommended Video

IPL-ல் இருந்து Kane Williamson Ruled out ஆனார்! சிக்கலில் SRH | OneIndia Tamil
மும்பைக்கு கஷ்ட காலம்

மும்பைக்கு கஷ்ட காலம்

இது இரண்டும் நடைபெறுவது அவ்வளவு எளிதல்ல என்பதால், 5 முறை சாம்பியனான மும்பை அணி முதல் முறையாக 10வது இடத்தில் ஐபிஎல் தொடரை நிறைவு செய்கிறது. இதுவரை சிஎஸ்கே அணி கடைசி இடத்தை பிடித்தது இல்லை. வரலாற்றிலேயே 2வது முறையாக தான் பிளே ஆப் சுற்றுக்குள் சிஎஸ்கே நுழையாமல் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Story first published: Wednesday, May 18, 2022, 17:43 [IST]
Other articles published on May 18, 2022
English summary
IPL 2022- CSK or MI- scenario to avert 10th place in Points table ஐபிஎல்- கடைசி இடத்தை பிடிக்கப்போவது யார்? அவமானத்தை தவிர்க்க சென்னை, மும்பை கடும் போட்டி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X