Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 வீரர்கள் மீது மட்டுமே நம்பிக்கை.. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டி.. சிஎஸ்கே ப்ளேயிங் 11 இதோ!

மும்பை: மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி அதீத கவனத்துடன் ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் இன்று இரு அணிகளும் மும்பை DY பாட்டில் மைதானத்தில் மோதுகிறது.

4 முறை சாம்பியன் சிஎஸ்கே மற்றும் 5 முறை சாம்பியன் மும்பை அணிகளின் மானத்தை காப்பாற்றப்போவது இன்றைய போட்டி தான்.

சிஎஸ்கே - மும்பை போட்டி

சிஎஸ்கே - மும்பை போட்டி

நடப்பு தொடரில் இரண்டு அணிகளுமே சொதப்பி வருகிறது. சென்னை அணி 6 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியும், மும்பை அணி 6 போட்டிகளில் ஒரு வெற்றியை கூட பெறாமலும் உள்ளது. எனவே இன்று வெற்றி கம்பேக் தரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. சென்னை அணியும் இதற்காக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ஓப்பனிங்கை பொறுத்தவரையில் சிஎஸ்கேவுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. ருதுராஜ் கெயிக்வாட் கடந்த போட்டியின் மூலம் ஃபார்முக்கு திரும்பிவிட்டார். ராபின் உத்தப்பாவும் மும்பை அணிக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்துள்ளதால் இந்த ஜோடியே களமிறங்கும். முன்னதாக டெவோன் கான்வே ஓப்பனிங் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் திடீரென தொடரில் இருந்து விலகிவிட்டார்.

ஃபார்ம் அவுட்

ஃபார்ம் அவுட்

மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் மொயீன் அலி, அம்பத்தி ராயுடு ஆகிய சீனியர் வீரர்கள் ஃபார்ம் அவுட்டில் உள்ளனர். இவர்கள் இன்று மும்பைக்கு எதிராக கம்பேக் தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதே போல இளம் வீரர் ஷிவம் தூபே அட்டகாசமான ஃபார்முக்கு திரும்பியுள்ளதால், இன்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

பவுலிங் படை

பவுலிங் படை

லோயர் ஆர்டரில் கேப்டன் ஜடேஜா மற்றும் எம்.எஸ்.தோனி களமிறங்குவார்கள். பவுலிங்கை பொறுத்தவரையில் இந்த முறையும் கிறிஸ் ஜோர்டன், முகேஷ் சௌத்ரிக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என தெரிகிறது. கடந்த போட்டியில் ஜோர்டன் 58 ரன்களை வாரி வழங்கினார். முகேஷ் சௌத்ரியும் சரவர இல்லை. எனினும் டுவைன் பிரிட்டோரியஸை சிஎஸ்கே புறக்கணித்து வருகிறது.

Recommended Video

IPL 2022 : Mumbai Indians vs Chennai Super Kings Match | Oneindia Tamil
2 முன்னணி வீரர்கள்

2 முன்னணி வீரர்கள்

மஹீஷ் தீக்‌ஷணா மற்றும் டுவைன் பிராவோ தான் தற்போது சிஎஸ்கேவின் நம்பிக்கையாக உள்ளனர். கடந்த சில போட்டிகளில் இவர்கள் இருவரும் முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து உதவுகின்றனர். எனவே இவர்களை சமாளிப்பது தான் இன்று மும்பை அணிக்கு பெரும் தலைவலியாக இருக்கும்.

Story first published: Thursday, April 21, 2022, 11:00 [IST]
Other articles published on Apr 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+