
ஐபிஎல் பரிதாபம்
இதுவரை 8 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வியடைந்துவிட்டது. எனவே அந்த அணி மீதமுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட, அதிர்ஷ்டத்தால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும். தற்போது இதே நிலைமை தான் சென்னை அணிக்கும் உருவாகியுள்ளது.

சிஎஸ்கே ப்ளே ஆஃப் வாய்ப்பு
ஜடேஜா தலைமையிலான சென்னை அணி, பஞ்சாப்-க்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்தது. இதனால் வெறும் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருந்து வருகிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 14 புள்ளிகள் பெற வேண்டும். அந்த வகையில் சென்னை அணிக்கு இன்னும் 10 புள்ளிகள் தேவை.

வாழ்வா? சாவா?
சிஎஸ்கேவுக்கு மீதம் 6 போட்டிகள் உள்ளது. இதில் அனைத்திலும் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகும். குறைந்தபட்சம் 5ல் வெற்றி பெற்றால் கூட மற்ற அணிகளின் புள்ளிகள் மற்றும் ரன்ரேட்டை வைத்து அதிர்ஷ்டத்தால் உள்ளே நுழையலாம். எனவே இனி வரும் ஒவ்வொரு போட்டியும் அந்த அணிக்கு வாழ்வா? சாவா? போட்டி தான்.

அடுத்த 6 போட்டிகள்
சென்னை அணிக்கு அடுத்த 6 போட்டிகளும் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுடன் நடைபெறவுள்ளது. இதில் அடுத்தாக வரும் மே 1ம் தேதியன்று ஐதராபாத் அணிக்கு எதிராக மோதுகிறது.


Click it and Unblock the Notifications