Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுமட்டும் நடந்தா போதும்.. சிஎஸ்கே ப்ளே ஆஃப் வாய்ப்பு அதிகரிப்பு.. ரசிகர்கள் குஷி - எப்படி தெரியுமா?

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்புகள் சற்று அதிகரித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Recommended Video

Dhoniயின் Epic Reply: 'Playoff போகலனா உலகம் அழிஞ்சிராது' | CSK vs DC | OneIndia Tamil

ஐபிஎல் தொடரின் 54வது லீக் போட்டியில் டெல்லி அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி மீண்டும் ப்ளே ஆஃப் கதவுகளை தொட்டுவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

சிஎஸ்கே ப்ளே ஆஃப்

சிஎஸ்கே ப்ளே ஆஃப்

சென்னை அணி தற்போது வரை 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்று 8வது இடத்தில் உள்ளது. ப்ளே ஆஃப் செல்வதற்காக ஒவ்வொரு அணிக்கும் குறைந்தபட்சம் 16 புள்ளிகள் தேவை. சென்னை அணி மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட 14 புள்ளிகள் தான் கிடைக்கும். எனினும் சில விஷயங்கள் நடந்தால் 14 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சென்றுவிடலாம்.

 ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி

ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி

KKR vs MI - மும்பை வெற்றிபெற வேண்டும்

LSG vs GT - வெற்றி தோல்வி பிரச்சினை இல்லை

DC vs RR - ராஜஸ்தான் வெற்றிபெற வேண்டும்

CSK vs MI - சிஎஸ்கே வெற்றிபெற வேண்டும்

RCB vs PBKS - பஞ்சாப் வெற்றிபெற வேண்டும்

KKR vs SRH - கொல்கத்தா வெற்றிபெற வேண்டும்

CSK vs GT - சிஎஸ்கே வெற்றிபெற வேண்டும்

LSG vs RR - வெற்றி தோல்வி பிரச்சினை இல்லை

PBKS vs DC - டெல்லி வெற்றிபெற வேண்டும்

MI vs SRH - மும்பை வெற்றிபெற வேண்டும்

KKR vs LSG - லக்னோ வெற்றிபெற வேண்டும்

RCB vs GT - குஜராத் வெற்றிபெற வேண்டும்

RR vs CSK - சிஎஸ்கே வெற்றிபெற வேண்டும்

MI vs DC - மும்பை வெற்றிபெற வேண்டும்

SRH vs PBKS - ஐதராபாத் வெற்றி பெற வேண்டும்

அந்த 4 அணிகள்

அந்த 4 அணிகள்

மேற்கூறிய அனைத்து விஷயங்களும் சரியாக நடந்துவிட்டால், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ மற்றும் ராஜஸ்தான் ஆகிய 3 அணிகள் ப்ளே ஆஃப் சென்றுவிடும். 4வது இடத்திற்கு சிஎஸ்கே, ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகளும் தலா 14 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு போட்டிப்போடும். இதில் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே ப்ளே ஆஃப் செல்லலாம்.

முக்கியமான செயல்

முக்கியமான செயல்

மேற்கூறிய கணக்குகளில் ஏதேனும் ஒன்று தவறாக நடந்தால் கூட சிஎஸ்கேவுக்கு சிக்கல் உருவாகும். இதுமட்டுமல்லாமல் மீதமுள்ள 3 போட்டிகளிலும் சென்னை அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ரன்ரேட்டை உயர்த்த வேண்டியதும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, May 9, 2022, 13:58 [IST]
Other articles published on May 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+