Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவில் இருந்த அதிரடி வீரரும் போய்ட்டாரு? ராயுடு கையில் பெரிய கட்டு.. சோதனை மேல் சோதனை

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சோதனை மேல் சோதனையாக வந்து கொண்டே இருக்கிறது.

நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சிஎஸ்கே அணியில் போட்டி தொடங்குவதற்கு முன் தோனி தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

சிஎஸ்கே மெகா ஏலத்தின் போது 14 கோடி ரூபாய் கொடுத்து எடுத்த வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹருக்கும் காயம் ஏற்பட்டது.

அடுத்தடுத்து காயம்

அடுத்தடுத்து காயம்

பாதி தொடரில் வந்து கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட போது முற்றிலும் தொடரை விட்டு தீபக் சஹார் விலகினார். சரி, நியூசிலாந்து வீரர் ஆடம் மிலினை வைத்து சமாளித்துவிடலாம் என எதிர்பார்த்த போது, அவருக்கும் காயம் ஏற்பட்டு தொடரிலிருந்து விலகினார். சரி, பந்துவீச்சு தான் அப்படி உள்ளது என்று நினைத்தால், பேட்டிங்கிலும் சொதப்பல்.

பேட்டிங்கில் பின்னடைவு

பேட்டிங்கில் பின்னடைவு

மொயின் அலியின் விசா பிரச்சினை காரணமாக, அவர் முதல் போட்டியை தவறவிட்டார். அவர் ஃபார்ம்க்கு திரும்பிவிடுவார் என எதிர்பார்த்த நிலையில், அவருக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டது. இதனால் அவரும் சில போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.மேலும் திருமணம் காரணமாக தொடக்க வீரர் கான்வேவும் சென்றுவிட்டார்.

ராயுடுவுக்கு காயம்

ராயுடுவுக்கு காயம்

தற்போது பேட்டிங்கில் ஃபார்மில் இருந்த ஒரே வீரரான அம்பத்தி ராயுடு, நேற்றைய பஞ்சாப்க்கு எதிரான ஆட்டத்தில் தனி ஆளாக போராடினார். ஆனால், ஃபில்டிங் செய்யும் போது அவருக்கு கையில் அடிப்பட்டது. இதனால் பந்துவீசும் போது அவர் களத்தில் இல்லை. இருந்தாலும் பேட்டிங் செய்ய வந்தார். இதனால், அவருக்கு காயத்தின் தாக்கம் அதிகமாகியுள்ளது.

கையில் கட்டு

கையில் கட்டு

தற்போது அம்பத்தி ராயுடு கையில் கட்டு போட்டு உள்ளார். இதனால், அவர் எஞ்சிய போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது, எஞ்சிய 6 போட்டியிலும் வென்றால் கூட பிளே ஆப் செல்ல மற்ற அணிகளின் தயவு தேவை.தற்போது ராயுடுவும் இல்லை என்றால் சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்ற பாடல் தான் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

Story first published: Tuesday, April 26, 2022, 15:40 [IST]
Other articles published on Apr 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+