சிஎஸ்கே VS மும்பை- நடப்பு சீசனின் மிக முக்கிய போட்டி.. 3 முக்கிய காரணங்கள்.. மாறும் புள்ளி பட்டியல்
மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் இன்று மிகவும் முக்கியமான ஆட்டமாக மும்பை , சிஎஸ்கே அணிகள் மோதும் போட்டி கருதப்படுகிறது.
Recommended Video
இதற்கு காரணம், சிஎஸ்கே அணி பிளே ஆஃப் போட்டிக்கு செல்ல எஞ்சிய போட்டிகளில் வெல்ல வேண்டும். மற்ற அணியின் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டும்.
அதற்கு முதல் படி இன்றைய போட்டி தான். இதில் சிஎஸ்கே வென்றால் புள்ளி பட்டியலில் நடக்க இருக்கும் மாற்றங்களை பார்க்கலாம்.

புள்ளி பட்டியலில் மாற்றம்
சிஎஸ்கே அணி தற்போது 11 போட்டியில் 8 புள்ளிகள் பெற்று 0.02 என பாசிட்டிவ் ரன் ரேட் உடன் 9வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வென்றால் 10 புள்ளிகள் பெற்றுவிடும். ரன் ரேட் பாசிட்டிவில் இருப்பதால் , சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் 9வது இடத்திலிருந்து 6வது இடத்துக்கு முன்னேறிவிடும். இதனால் இன்றைய ஆட்டம் சிஎஸ்கேவுக்கு மிக முக்கிய ஆட்டமாகும்.

வாழவா? சாவா?
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. மும்பை அணி ஒரு வேளை இன்றைய போட்டியில் வென்றால் சிஎஸ்கே அணி நாக் அவுட்டாகிவிடும். ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஒரே ஒரு அணி மட்டும் தான் பிளே ஆப்க்கு சென்றுள்ளது, இதனால் இன்னும் 8 அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு உள்ளது.

ஸ்டப்ஸ் அறிமுகம்
இன்றைய ஆட்டத்திற்கு இன்னொரு முக்கிய காரணம், தென்னாப்பிரிக்க வீரர் திரிஸ்டியன் ஸ்டப்ஸ் தான். பொலார்ட்க்கு பதிலாக ஸ்டப்ஸ் இன்றைய ஆட்டத்தில் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடி வீரராக அறியப்படும் ஸ்டப்ஸ், வாய்ப்பு கிடைத்தால் எப்படி விளையாடுவார், முத்திரை பதிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கடைசி போட்டி
தோனிக்கு வயது 40 ஆகிவிட்டது. அடுத்த சீசனில் விளையாடுவாரா என்று தெரியவில்லை, இதனால் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக தோனி கடைசி முறை களமிறங்குவது இன்றாக கூட இருக்கலாம். தோனியின் சிஎஸ்கேவும், மும்பையும் தான் ஐபிஎல் போட்டியின் அடையாளமே. இதனால் கடைசி ஒரு முறை இந்த முக்கிய ஆட்டத்தில் தோனி களமிறங்குவதாக இன்றைய போட்டி கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications