Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே இன்று வென்றால் என்ன நடக்கும்? புள்ளி பட்டியலில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் 49வது லீக் ஆட்டத்தில் இன்று பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.

சென்னை அணி 9 போட்டியில் விளையாடி 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. ஆர்சிபி அணி 10 போட்டியில் விளையாடி 10 புள்ளிகளை பெற்றுள்ளது.

தற்போது அந்த அணி 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. நடப்பு சீசனில் இன்று நடைபெறும் லீக் ஆட்டம் மிகவும் முக்கியமானவை.

சிஎஸ்கே வென்றால்..

சிஎஸ்கே வென்றால்..

இன்று மட்டும் தோனி தலைமையிலான சிஎஸ்கே வெற்றி பெற்றால், சிஎஸ்கே அணி 10 போட்டிகள் விளையாடி 8 புள்ளிகளுடன் அதே 9வது இடத்தில் தான் இருக்கும். அதுவே ஒரு 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், சிஎஸ்கே அணி 8வது இடத்துக்கு முன்னேறிவிடும். இதுவே 70,80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், டெல்லியை பின்னுக்கு தள்ளி சிஎஸ்கே 7வது இடத்துக்கு முன்னேறிவிடும்.

ஆர்சிபிக்கு முக்கியம்

ஆர்சிபிக்கு முக்கியம்

ஆனால் ஆர்சிபி அணிக்கு இன்று தோல்வி அடைந்தாலும் புள்ளி பட்டியலில் சரிவை தராது. மாறாக, இனி எஞ்சிய 3 போட்டியிலும் வென்று, மற்ற அணிகளின் தயவு இருந்தால் தான் பிளே ஆப் வாய்ப்பு என்ற நிலைக்கு ஆர்சிபி தள்ளப்படும். இதனால் தான் இன்றைய போட்டி சிஎஸ்கேவுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே போன்று ஆர்சிபி அணிக்கும் முக்கியம்.

ஆர்சிபி வென்றால்..

ஆர்சிபி வென்றால்..

இதுவே இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி வென்றால், சிஎஸ்கே அணி நாக் அவுட் ஆகிவிடும். பெங்களூரு அணி 5வது இடத்துக்கு முன்னேறிவிடும். பெங்களூருவின் ரன் ரேட் சிஎஸ்கேவை விட குறைவாக உள்ளதால், அந்த அணி பெரிய ஸ்கோர் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். இதனால் பல்வேறு திட்டங்களை ஆர்சிபி அணி வகுத்துள்ளது.

Recommended Video

RCB vs CSK - Dhoni's Masterstroke, Maheesh Theekshana Three Wickets In One Over | Oneindia Tamil
ஆர்சிபி யுத்தி

ஆர்சிபி யுத்தி

பெங்களூரு அணி கடந்த 3 போட்டிகளாக தோற்றதுக்கு முக்கிய காரணமே தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் சொதப்புவது தான். சிஎஸ்கேவுக்கு எதிராக எப்போதுமே கார்த்திக் அதிரடியாக விளையாடுவார் ( அணியில் இடம் இல்லை என்ற கோவம் தான்). இதனால் அவரையும், டுபிளஸிசையும் கட்டுப்படுத்துவதே சிஎஸ்கே அணிக்கு மிகவும் சிக்கலாக இருக்கும்.

Story first published: Wednesday, May 4, 2022, 18:27 [IST]
Other articles published on May 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+