தோனி விலகலால் சிஎஸ்கேவின் கதி என்ன? பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா சிஎஸ்கே? மாறும் ஐபிஎல் சீன்
மும்பை: ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடர் நாளை முதல் தொடங்குகிறது. மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது. நாளை தொடங்கம் முதல் போட்டியில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், கேப்டன் பதவியை விட்டு தோனி விலகுவதாக அறிவித்தார். இதனால் நடப்பு சீசனில் சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதை தற்போது காணலாம்.

பலமான அணி
ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும்பாலும் தங்கள் அணிக்கு ஏற்கனவே விளையாடிய வீரர்களை தான் தேர்வு செய்தனர். மேலும் திறமையான வீரர்களையும் அணியில் சேர்த்தனர். இதன் மூலம் ருத்துராஜ், கான்வே, அம்பத்தி ராயுடு, உத்தப்பா, ஜடேஜா, தோனி, ஹங்கர்கேகர், சிவம் துபே, ஆடம் மிலின் போன்ற பலமான அணியுடன் இம்முறை சிஎஸ்கே அணி களமிறங்கியது.

பின்னடைவு
இதனால் சிஎஸ்கேவின் வெற்றி வாய்ப்பு இம்முறை அதிகமாக உள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் தோனியின் ராஜினாமா முடிவு சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஜடேஜாவுக்கு பெரும் அளவில் கேப்டன் அனுபவம் இல்லை. இதனால் அவர் இவ்வளவு பெரும் பொறுப்பை எப்படி சமாளிப்பார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சாதகம்
ஜடேஜாவுக்கு ஒரு சாதகம் என்னவென்றால், களத்தில் அவருக்கு வழிகாட்டியாக தோனி இருப்பார். இருப்பினும், நாமே ஒரு முடிவு எடுப்பதற்கும், அடுத்தவர்களிடம் சொல்லி ஒரு முடிவு எடுப்பதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா. அந்த வித்தியாசம் தான் சிஎஸ்கேவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கலாம்.

வெற்றி வாய்ப்பு
மேலும், கேப்டனாக சில பாடத்தை கற்று கொள்ள சில போட்டிகள் ஆகும். இதனால் சிஎஸ்கே வின் வெற்றிகள் சில போட்டியில் பாதிக்கலாம். கேப்டன் எப்படி சூழலுக்கு ஏற்ப யுத்திகளை மாற்றி, நெருக்கடியை சமாளிப்பார்களோ அவர்கள் தான் டி20 போட்டியில் வெற்றி பெற முடியும். இதனால் இம்முறை சிஎஸ்கே அணி பிளே ஆப்க்கு செல்ல வாய்ப்பு உண்டு


Click it and Unblock the Notifications