Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்- ஏமாற்றத்தில் சிஎஸ்கே இளம் வீரர்கள்.. ஆசையை கலைத்த தோனி முடிவு.. வெற்றியை பாதிக்க வாய்ப்பு

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் தொடங்குவதற்கு முன் கேப்டன் பதவியை விட்டு விலகுவதாக தோனி அறிவித்தது, சிஎஸ்கே இளம் வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தின் போது பல்வேறு இளம் வீரர்கள் தோனியின் கேப்டன்ஷிப் கீழ் விளையாடுவதை பெருமையாக நினைப்பதாக கூறினார்.

தோனி கேப்டன்ஷிப் கீழ் விளையாடினால் பல விசயங்களை கற்று கொள்ள முடியும் என்றும், அது எங்கள் வாழ்நாள் கனவு என்றும் கூறி வந்தனர்.

இளம் வீரர்களின் ஆசை

இளம் வீரர்களின் ஆசை

தோனியின் தலைமையில் விளையாட் போகிறோம் என்று நினைத்த சிஎஸ்கே வீரர்களுக்கு, இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கும். இது நிச்சயம் மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தி, களத்தில் அவர்களது ஆட்டத்திலும் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்த கூட வாய்ப்புள்ளது. குறிப்பாக ஹங்கர்கேகர், சிவம் துபே, பிரசாந்த் சோலங்கி ஆகியோர் தோனியின் தலைமையில் விளையாட போகிறோம் என்ற மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தனர்.

வாய்ப்பு இருக்கு

வாய்ப்பு இருக்கு

ஆனால் இந்த இளம் வீரர்களுக்கு இருக்கும் ஒரே நிம்மதி, தோனி கேப்டன் பதவியை விட்டு விலகினாலும், அவர் களத்தில் நம்முடன் தான் இருப்பார் என்பது தான். தோனி வழக்கம் போல் இளம் வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவார். இதனால் இளம் வீரர்களும் தங்களது சந்தேகத்தை தோனியிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

அப்படி நடந்தால்..

அப்படி நடந்தால்..

அதே சமயம், தோனி ஒரு வேலை, ஐபிஎல் தொடருக்கு முழுக்கு போட்டு, வீட்டில் ஜாலியாக அமர்ந்துவிட்டார் என்று வைத்து கொள்வோம். அப்போது தான் சிஎஸ்கேவின் அடித்தளமே ஆடிவிடும். பல இளம் வீரர்கள் எவ்வித அனுபவமும், வழிகாட்டுதலும் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட தள்ளப்படுவார்கள்.

வரலாறு சொல்வது என்ன?

வரலாறு சொல்வது என்ன?

ஏற்கனவே குல்தீப் யாதவ், சாஹல் கதையிலும் அப்படி தான் நடந்தது தோனி அணியில் இருக்கும் வரை அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து எப்படி பந்துவீச வேண்டும் என்று அறிவுரை வழங்குவார். தோனி சென்ற பிறகு, அவர்கள் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அணியிலிருந்தே நீக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அப்படி ஒரு நிலை சிஎஸ்கேவுக்கு ஏற்பட தோனி விட மாட்டார் என நம்புவோமாக..

Story first published: Friday, March 25, 2022, 10:52 [IST]
Other articles published on Mar 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+