Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்ளேயிங் 11ல் வாய்ப்பு இல்லை.. தோனி ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்.. கேப்டன் ஜடேஜாவின் முதல் பணி இதுதான்!

மும்பை: சென்னை அணியின் ப்ளேயிங் 11ல் இருந்து தோனி வெளியேற்றப்படுவதே ஜடேஜாவின் முதல் பணியாக அமைந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ்.தோனி விலகுவதாக அறிவித்துள்ளார்.

புதிய கேப்டனாக அணியின் சீனியர் வீரர் ரவீந்திர ஜடேஜா செயல்படுவார் என்றும் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

 சிஎஸ்கேவின் விளக்கம்

சிஎஸ்கேவின் விளக்கம்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேவுக்கு கோப்பையை வென்றுக்கொடுத்துவிட்டு தோனி ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தாண்டின் முதல் போட்டியில் இருந்தே ஜடேஜா கேப்டன்சி செய்வார் என்றும், அவருக்கு கீழ் தோனி ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

 ஜட்டுவின் முதல் பணி

ஜட்டுவின் முதல் பணி

இந்நிலையில் இதில் ஜடேஜாவுக்கு முதல் பணியே சங்கடமாக அமைந்துள்ளது. அதாவது எம்.எஸ்.தோனியை ப்ளேயிங் 11ல் இருந்து வெளியேற்றுவது தான். 40 வயதாகும் தோனி, கடந்த 2 சீசன்களாக மோசமான ஃபார்மில் இருந்து வருகிறார். கடந்த சீசனில் 16 போட்டிகளில் வெறும் 114 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். எனினும் கேப்டன் என்ற பதவி மட்டுமே தோனியை காப்பாற்றி வந்தது. இந்தாண்டு அதற்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

எம்.எஸ்.தோனியின் குணம்

எம்.எஸ்.தோனியின் குணம்

தோனி எப்போதுமே தன்னால் முடியவில்லை என்றால் எந்தவித ஈகோவும் பார்க்காமல் ஒதுங்கிவிடுவார். அதுபோல இந்த விஷயத்திலும் வாய்ப்புகாக காத்துக்கொண்டிருக்கும் ஏதேனும் ஒரு இளம் வீரருக்கு தன்னுடைய இடத்தை கொடுத்துவிட்டு, நகர்ந்துக் கொள்வார் எனத் தெரிகிறது. இந்த அறிவிப்பையும் ஜடேஜா தான் களத்தில் அறிவிக்க வேண்டிய சங்கடமான சூழல் உள்ளது.

வரலாற்றில் முதல் முறை

வரலாற்றில் முதல் முறை

ரசிகர்களின் ஆசைக்காக முதல் சில போட்டிகளில் தோனியை விளையாட வைக்கலாம். ஆனால் அதன் பின்னர் அணியின் நலன் கருதி அவர் வெளியே உட்காரப்போவதை இந்தாண்டு ரசிகர்கள் பார்க்கலாம். ஐபிஎல் வரலாற்றில் தோனி ப்ளேயிங் 11ல் இடம் கிடைக்காமல் போவது இந்தாண்டு நடைபெறும் என்பது கசப்பான உண்மை.

Story first published: Thursday, March 24, 2022, 18:26 [IST]
Other articles published on Mar 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+