
தோனி பதவி விலகல்
ஐபிஎல் தொடங்கியது முதல் தற்போது வரை சிஎஸ்கேவுக்காக தோனி களத்திற்கு வந்தால், தோனி மட்டுமே கேப்டனாக இருப்பார். அவர் இல்லாத சமயத்தில் ரெய்னா கேப்டன்சி செய்துள்ளார். ஆனால் நடப்பு சீசன் முழுவதும் ரவீந்திர ஜடேஜாவுக்கு கீழ் தோனி ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் விளையாட வேண்டியிருக்கும். இப்படி ஒரு நிலையில் தோனியை பார்க்க வேண்டுமா? என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

தோனி குறித்த தெரியாத விஷயம்
ஆனால் தோனி ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் சிஎஸ்கேவுக்கு ஆடுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் ஒரே ஒருமுறை கேப்டன் பதவியின்றி விளையாடியுள்ளார். கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னை - யார்க்ஷைர் அணிகள் மோதின. அப்போட்டியில் சுரெஷ் ரெய்னாவுக்கு கேப்டன் பதவியை தரவுள்ளதாக தோனி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதுவும் டாஸ் போடுவதில் இருந்தே ரெய்னா தான் கேப்டன்சி செய்தார்.

போட்டியின் முடிவு
சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாததால், அந்த லீக் போட்டி முக்கியமானதாக இல்லை. ரெய்னாவின் தலைமையில் ஆடிய சிஎஸ்கே 141 என்ற இலக்கை 19 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது. எஸ்.பத்ரிநாத் அதிபட்சமாக 47 ரன்கள் அடிக்க, கேப்டன் ரெய்னா மற்றும் தோனி தலா 31 ரன்கள் அடித்திருந்திருந்தனர்.

நெகிழ்ச்சியடைந்த ரெய்னா
இப்போட்டிக்கு பின்னர் பேசிய ரெய்னா, நான் கேப்டன்சி பதவியை அனுபவித்து பார்க்க வேண்டும் என தோனி ஆசைப்பட்டார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனக்கூறினார். ஆனால் இன்று தோனிக்கு அடுத்த இடத்தில் இருந்த சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் கூட இடம்பெறவில்லை என்பது தான் ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











