Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இவ்வளவு நடந்துச்சா” கே.எல்.ராகுலுக்காக 3 ஓவர்களாக டூப்ளசிஸ் போட்ட ஸ்கெட்ச்.. தோனியையே மிஞ்சிட்டார்

கொல்கத்தா: கே.எல்.ராகுலுக்கு 3 ஓவர்களாக பக்காவான ஸ்கெட்ச் போட்டு கடைசி நேரத்தில் டூப்ளசிஸ் விக்கெட் எடுத்தது தெரியவந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவர்களில் 207/4 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 193/6 ரன்களை எடுத்தது.

ஆர்சிபி வென்றது எப்படி

ஆர்சிபி வென்றது எப்படி

ஆட்டத்தின் 19வது ஓவர் வரை ஆர்சிபி தோல்வியின் விளிம்பில் தான் இருந்தது. இதற்கு காரணம் கே.ஏல்.ராகுலின் அதிரடி. ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர், பவுண்டரி என விளாசி வந்த அவர் 58 பந்துகளில் 79 ரன்களை குவித்திருந்தார். கடைசி 12 பந்துகளில் 32 ரன்கள் தேவை என்ற போது, அவர் களத்தில் நல்ல ஃபார்மில் இருந்ததால் ஆர்சிபி ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

சுவாரஸ்ய

சுவாரஸ்ய

எனினும் ஆட்டத்தின் 19வது ஓவரில் ஹாசல்வுட் வீசிய பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று கே.எல்.ராகுல் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் பின்னர் லக்னோவின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் உடைந்தது. இந்நிலையில் கே.எல்.ராகுலை வீழ்த்த 2 ஓவர்களாக டூப்ளசிஸ் வியூகம் வகுத்து வந்தது தெரியவந்துள்ளது.

கே.எல்.ராகுலின் ஆர்வக்கோளாறு

கே.எல்.ராகுலின் ஆர்வக்கோளாறு

17வது ஓவரில் ஹசரங்கா வீசிய பந்தை திடீரென கே.எல்.ராகுல் நகர்ந்து நின்று ஸ்வீப் ஷாட் மூலம் சிக்ஸர் அடித்தார். இதனையடுத்து அடுத்த பந்தே ஃபீல்டிங்கில் ஷார் ஃபைன் லெக் திசையில் ஒருவரை டூப்ளசிஸ் நிறுத்தினார். ஹசரங்காவிடமும் ஸ்வீப் ஷாட்டிற்கு ஏற்றவகையில் பந்துவீசினார். எதிர்பார்த்தபடியே அந்த பந்தையும் ஸ்வீப் ஷாட் ஆட முயன்றார். ஆனால் துரதிஷ்டவசமாக பந்து மிஸ்ஸாகி கால் பேடில் பட்டு பவுண்டரிக்கு சென்றது.

சுதாரித்த டூப்ளசிஸ்

சுதாரித்த டூப்ளசிஸ்

ராகுலின் ஸ்வீப் ஷாட் ஆர்வத்தை புரிந்துக்கொண்ட டூப்ளசிஸ், 18வது ஓவரிலும் ராகுலுக்கு அதே போன்று பந்துவீச ஹர்ஷல் பட்டேலிடம் கூறினார். அப்போது சற்று வித்தியாசமாக ஸ்கூப் ஷாட் ஆட முயன்று சிங்கிள் அடிக்க முயன்றார். இப்படி அடுத்தடுத்து தொடர்ந்து முயற்சித்த டூப்ளசிஸுக்கு 19வது ஓவர் தான் கைக்கொடுத்தது.

குழப்பம் செய்த ஹாசல்வுட்

குழப்பம் செய்த ஹாசல்வுட்

ஹாசல்வுட் வீசிய அந்த ஓவரில் ராகுலுக்கு முதல் 3 பந்துகளில் ஆஃப் சைட்டி, வைட் என போட்டு குழப்பப்பட்டது. இதன் பின்னர் 4வது பந்து லோயர் யார்க்கராக போட, அந்த பந்தையும் ஆர்வக்கோளாறால் கே.எல்.ராகுல் ஸ்கூப் ஷாட் ஆடினார். டூப்ளசிஸ் நினைத்தபடியே ஷார்ட் ஃபைன் லெக் திசையில் இருந்த ஃபீல்டருக்கு கேட்ச்-ஆகி விக்கெட் பறிபோனது.

Story first published: Thursday, May 26, 2022, 12:36 [IST]
Other articles published on May 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+